இந்த மூன்று கிரகங்கள் ஒன்றாக இருந்தால்... அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்...!!
Nov 20, 2019 Malini 355 ஆன்மிகம்
👉 நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.
👉 நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன.
அவையாவன,
🌟 சூரியன்
🌟 சந்திரன்
🌟 செவ்வாய்
🌟 புதன்
🌟 குரு
🌟 சுக்கிரன்
🌟 சனி
🌟 ராகு
🌟 கேது
👉 இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில், சந்திரனுடன் இரண்டு கிரகங்கள் சேர்ந்து வந்தால் கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
சந்திரன் + புதன் + சுக்கிரன் :
🌟 கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
🌟 கீர்த்தி உடையவர்கள்.
🌟 சிறிது கர்வ குணம் கொண்டவராக விளங்கக்கூடியவர்கள்.
சந்திரன் + புதன் + சனி :
🌟 தெளிவான சிந்தனைகளை உடையவர்கள்.
🌟 நற்குணம் கொண்டவர்கள்.
🌟 உயர் அதிகாரிகளுடன் நட்புடன் பழகக்கூடியவர்கள்.
சந்திரன் + குரு + சுக்கிரன் :
🌟 அதிர்ஷ்டம் உடையவர்கள்.
🌟 புகழ் பெறக்கூடியவர்கள்.
🌟 இலக்கியம் சார்ந்த கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.
சந்திரன் + குரு + சனி :
🌟 கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
🌟 மந்திர கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.
🌟 அழகான தோற்றம் கொண்டவர்கள்.
சந்திரன் + சுக்கிரன் + சனி :
🌟 வேதங்களில் அறிவு பெற்றவர்கள்.
🌟 புத்தகம் இயற்றும் தன்மை கொண்டவர்கள்.
🌟 அலங்காரப் பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.