No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இந்த கிரகங்களுடன்... சந்திரன் சேர்ந்தால்.. லாபம் அடைவார்கள்..!

Nov 19, 2019   Malini   334    ஆன்மிகம் 

👉 நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

👉 நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன.

அவையாவன,

🌟 சூரியன்

🌟 சந்திரன்

🌟 செவ்வாய்

🌟 புதன்

🌟 குரு

🌟 சுக்கிரன்

🌟 சனி

🌟 ராகு

🌟 கேது


👉 இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில், சந்திரனுடன் இரண்டு கிரகங்கள் சேர்ந்து வந்தால் கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.


சந்திரன் + செவ்வாய் + புதன் :

🌟 உறவினர்களிடம் இருந்து விலகி இருக்கக்கூடியவர்கள்.

🌟 பூர்வீகச் சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும்.

சந்திரன் + செவ்வாய் + குரு :

🌟 பிறருடைய பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 வாழ்க்கைத்துணையிடம் அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 வெளியூரில் வாழக்கூடியவர்கள்.

🌟 பலவகைப்பட்ட திறமைகள் உடையவர்கள்.

சந்திரன் + செவ்வாய் + சுக்கிரன் :

🌟 பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கொண்டவர்கள்.

🌟 மனதில் ஏதாவது கவலையுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 எந்த வகையானாலும் பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள்.

சந்திரன் + செவ்வாய் + சனி :

🌟 தாயிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

🌟 பிறர் செய்யும் செயல்களில் இருக்கும் குறைகளை காணக்கூடியவர்கள்.

🌟 விவசாயம் சார்ந்த பணிகளின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

சந்திரன் + புதன் + குரு :

🌟 அனைவராலும் விரும்பப்படக்கூடியவர்கள்.

🌟 அறிவுக்கூர்மை கொண்டவர்கள்.

🌟 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.



Tagged  SANTHERAN

Share this valuable content with your friends