No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாயுடன், சனி சேர்ந்து இருந்தால்... இத்தனை பலன்களா?

Nov 13, 2019   Malini   287    ஆன்மிகம் 

👉 நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

👉 நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன.

அவையாவன,

🌟 சூரியன்

🌟 சந்திரன்

🌟 செவ்வாய்

🌟 புதன்

🌟 குரு

🌟 சுக்கிரன்

🌟 சனி

🌟 ராகு

🌟 கேது


👉 இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில், செவ்வாயுடன் சேர்ந்து வரும் கிரகங்களின் பலன்களை பற்றி பார்க்கலாம்.


செவ்வாய் + புதன் :

🌟 தாய்மாமன் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

🌟 மனைகளால் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 அதிகாரம் கொண்ட உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

🌟 எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கொண்டவர்கள்.

செவ்வாய் + குரு :

🌟 குருமார்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள்.

🌟 எளிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 சமூக பணிகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 அறிவுக்கு மிஞ்சிய திறமை கொண்டவர்கள்.

🌟 எதிர்ப்புகளை சாதுர்யமாக வெல்லக்கூடியவர்கள்.

செவ்வாய் + சுக்கிரன் :

🌟 வெளியூர் பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 எழில்மிகு தோற்றம் கொண்டவர்கள்.

🌟 எதையும் சாமர்த்தியமாக செய்யும் திறமை உடையவர்கள்.

🌟 புதுவிதமான எண்ணங்களை கொண்டவர்கள்.

செவ்வாய் + சனி :

🌟 மனோதைரியம் உடையவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கக்கூடியவர்கள்.

🌟 தன் மனம் விரும்பும்படி வாழக்கூடியவர்கள்.

🌟 கற்பனை வளம் உடையவர்கள்.

🌟 சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

செவ்வாய் + ராகு :

🌟 திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள்.

🌟 சண்டை விவகாரங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 அனைவருடனும் பழகக்கூடியவர்கள்.

🌟 விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்.

செவ்வாய் + கேது :

🌟 நினைத்த செயலை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 உடன் பிறந்தவர்களிடம் அன்பு கொண்டவர்கள்.

🌟 மறைமுக சக்திகள் பற்றிய ஞானம் கொண்டவர்கள்.

🌟 உடல் வலிமை கொண்டவர்கள்.

🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

மேற்கூறிய அனைத்தும் பொதுவான பலன்களே ஆகும். அவரவர் லக்னங்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.



Tagged  seivvai

Share this valuable content with your friends