No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐப்பசி மாத பௌர்ணமி... அன்னாபிஷேக விழா...!!

Nov 12, 2019   Ananthi   364    ஆன்மிகம் 

🙏 சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமானுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

🙏 ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில், நிலத்தில் அறுவடையான புது நெல்லைக் குத்தி, புடைத்து, அதை அவித்து வடித்து அன்னம் சமைப்பார்கள். இந்த அன்னத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்து, அன்னத்தாலும், காய்கனிகளாலும் அலங்காரம் செய்வார்கள்.

🙏 பின்னர், அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும். இந்த அன்னத்தைப் புசிப்பவர்கள் சகலவித பாக்கியங்களையும் பெறுவார்கள்.

🙏 பக்தர்கள் உண்டது போக, மீதமிருக்கும் அன்னம் அந்த ஊரில் இருக்கும் குளம், ஏரிகளில் கரைத்து விடப்படும்.

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் :

🙏 ஐப்பசி மாத பௌர்ணமி தொடங்கியதும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 100 மூட்டை அரிசி அதாவது 1000 கிலோ சாதம் வடித்து அன்னாபிஷேகம் நடைபெறும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் :

🙏 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், அடி அண்ணாமலை ஸ்ரீஆதிஅருணாசலேஸ்வரர் கோவில் உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா விமர்சையாக நடைபெறும்.

தஞ்சை பெருவுடையார் கோவில் :

🙏 ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.

வைத்தியநாத சுவாமி :

🙏 அரியலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் :

🙏 திருவானைக்காவல் குபேர லிங்கம் பஞ்சபூத திருத்தலங்களில், நீர் ஸ்தலமான திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் :

🙏 காரைக்கால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம், காரைக்கால் கைலாசநாதர் ஆலயம், கோவில்பத்து பார்வதீஸ்வரர் ஆலயம், திருவேட்டைக்குடி திருமேனியழகர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும்.




Share this valuable content with your friends


Tags

இரட்டை குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?< இந்த வருட அர்த்தாஷ்டம சனி.! மயில் தோகையை வீட்டில் வைக்கலாமா? வீட்டிற்கு பால் எடுத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண் தேடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 மயில் இறகை பிடுங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 10ல் சுக்கிரன் thala diwali தேர்வில் தோல்வி அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாம்பு காலை இறுக்க சுற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விசுக்தி திருக்குறிப்புத் தொண்ட நாயனார் ! சர்வதேச கைம்பெண்கள் தினம் புதிய புடவை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குளிகை நேரத்தில் புதிய நகை வாங்கி அணியலாமா? 07.06.2019 Rasipalan in pdf format!! ஆடி மாதத்தில் தாலி பிரித்து கோர்க்கலாமா? கரிகாலன் உயிருடன் இருப்பவர்கள் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?