No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நல்ல மனையை தேர்வு செய்வது எப்படி?

Nov 12, 2019   Malini   425    வாஸ்து 

🏠வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் கட்டும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் பற்றி வாஸ்து நிறுவனர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களிடம் கேட்டபோது அவர் கூறிய விளக்கங்களை பார்ப்போம்.

🏠வீடாக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி... அவற்றை கட்டும்போது சில அடிப்படையான வாஸ்து விதிகளை கடைபிடிப்பது நல்லது. அதுவே அந்த இல்லத்தில் இருப்பவர்கள் சுபிட்சமாக வாழ்வதற்கும், அந்த நிறுவனம் வளர்ச்சியடையவும் வழிவகை செய்யும். வாஸ்துபடி மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆறு அடிப்படை விதிகள் உண்டு.

🏠காலியாக உள்ள ஒரு மனையில் அமைக்கப்படும் கட்டிடம், சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.

🏠மனையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியைவிட, வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக அளவிலான காலியிடம் இருத்தல் அவசியம்.

🏠மனையின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும், கனமில்லாமலும் இருக்க வேண்டும்.

🏠தென்மேற்கு பகுதி உயரமாகவும், கனமாகவும் இருக்க வேண்டும்.

🏠அதேபோல் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில்தான் இருக்க வேண்டும்.

வாஸ்து அடி‌ப்படை‌யி‌ல் ஒரு மனையை தே‌ர்வு செ‌ய்வது எப்படி?

🏠மனையை வாங்கும்போது அதன் திசையை அறிந்து வாங்குவது சிறந்தது. மனையின் திசையை, திசைக்காட்டி மூலம் அறிந்துக்கொள்ளலாம். கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த மனையை வாங்குவது சிறந்தது. ஏனெனில், கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த மனைகளில் வாஸ்துபடி கட்டிடம் கட்டுவது சுலபமாக இருக்கும்.

🏠இயற்கையாகவே ஓர் இடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும், தென்மேற்கு பகுதி உயர்ந்தும் இருந்தால், அந்த மனை விசேஷமானது எனலாம். மேலும், மனையின் வடகிழக்கு பகுதியில் இயற்கையாகவே ஏரி, குளம், பொதுக்கிணறு ஆகியவை இருந்தால் நல்லது.

🏠மனையின் தென்மேற்கு பகுதியில் குன்றுகள், தொலைப்பேசி கோபுரம், உயர்ந்த மரங்கள் போன்றவை இருந்தால் மிகவும் சிறப்பு. வீடு கட்டும் முயற்சியில் இறங்கும்போது, இப்படிப்பட்ட விதிகளையெல்லாம் கவனித்து அதற்கேற்ப மனை வாங்கி வீடு கட்டினால், நம் குடும்பமும், நாமும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.

🏠ஒரு மனைக்கு தெருக்குத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கண்ட அனைத்தையும் கவனத்தில் கொள்ளும் முன் நல்ல தெருக்குத்து உள்ளதா? என பார்த்து மனையை தேர்வு செய்ய வேண்டும்.வு செய்ய வேண்டும்.



Share this valuable content with your friends


Tags

Puthan தினசரி ராசிபலன்கள் (15.04.2020) மகேந்திரசிங் தோனி திருப்பதியில் ஆண்கள் மொட்டை அடிக்கலாமா? டிசம்பர் 23 இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இவர்கள்தான் காரணம் !! அமாவாசைக்கு பிறகு நெல் விதை விதைக்கலாமா? கோபிநாத் கவிராஜ் நிறைகுடத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த வார ராசிபலன்கள் (22.11.2021 - 28.11.2021) PDF வடிவில்...!! பெரிய கட்டிடத்தின் உச்சியில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக பால் தினம் புனைக்கதையின் மிகப்பெரிய எழுத்தாளர் parasuran daily horoscope 16.05.2020 in pdf format மலைப்பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்? daily rasipalan 16.03.2020 ராகு திசையில் ஒவ்வொரு திக்குகளை ஆளும் சக்திகள் !! தை மாதம் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா?