No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்து குறைபாடு நீங்குவதற்கு... பரிகாரம் செய்யலாமா?

Nov 05, 2019   Malini   331    வாஸ்து 

🏠 ஆதி கலையின் உன்னதமான கலை வாஸ்து, இது உடல், மனம், செயல் மூன்றும் ஒன்று சேர்ந்து பயணிக்க நம் முன்னோர்களால் வகுக்கப்பட்ட ஒரு சிறந்த சாஸ்திரம்.

🏠 வாஸ்து மனிதனுக்கும், பஞ்சபூதத்திற்கும் நேரடியான தொடர்பை வீட்டின் மூலம் ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

🏠 இயற்கையோடும், இயற்கை நீயதியோடும் வாழ வழிவகுக்கும் வாஸ்துவில் பரிகாரம் என்பது நிச்சயமாக பலன் அளிக்காது.

🏠 எப்படி மனிதனுக்கு உடலில் கை, கால், கண், மூக்கு, வாய் போன்ற உறுப்புகள் அதற்கான இடத்தில் இருந்தால்தான் அவை செயல்புரிய முடியுமோ, பயன்பெற முடியுமோ அதுபோன்றுதான் ஒரு வீட்டில் தென்கிழக்கில் சமையலறை, பூஜை அறை தென்மேற்கில் மேல்நிலை உயரமான அமைப்பில் நீர் தேக்கத்தொட்டி, படுக்கையறை என வருவது இயற்கை விதித்த விதியாகும்.

🏠 அதேபோல் வடகிழக்கில் பள்ளம், கிணறு போன்றவையும், வடமேற்கில் கழிவறை, மலக்குழி போன்றவையும் வர வேண்டும். இதை மீறி தவறாக இருந்தால் அதை சரி செய்ய வேண்டும்.

🏠 எப்படியொரு மனிதனுக்கு கண் இருக்கும் இடத்தில் காது இருந்தாலோ, மூக்கு இருக்கும் இடத்தில் வாய் இருந்தாலோ எந்த உபயோகமும் இல்லையோ அதை போன்றுதான் நம் வீட்டிற்கும் வாஸ்து குறைபாடு நீக்க வேறு மாற்றாக எந்த பரிகாரம் செய்தாலும் உபயோகமில்லை, பண விரயம் மட்டுமே!

🏠 ஆகையால், ஒரு நல்ல அனுபவமிக்க பரிகாரம் சொல்லாத வாஸ்து நிபுணரை அணுகி மிகச் சிறந்த, இயற்கை நியதிக்கு உட்பட்டு இருக்கும் ஒரு வீட்டை அமைத்து கொள்ளவும்.



Share this valuable content with your friends