No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கந்தசஷ்டி.... கந்தசஷ்டி விரதத்தின் பலன்கள்...!!

Nov 04, 2019   Malini   346    ஆன்மிகம் 

🌟விரதங்களில் கலியுக வரதனும், கண்கண்ட தெய்வமுமான கந்தனின் விரதமே கந்தசஷ்டி விரதம் ஆகும்.

🌟கந்தனின் சிறப்பான விரத நாட்கள்

🌟சுக்கிர வார விரதம்

🌟கார்த்திகை விரதம்

🌟கந்தசஷ்டி விரதம்

🌟இதில் கந்தசஷ்டி விரதம் மிகச் சிறந்த விரதமாக கருதப்படுகின்றது.

🌟கந்தசஷ்டி விரதத்தின் மூலம் நாம் விரும்பிய பலன்களை பெறலாம்.

அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், கடன் நீங்கவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம். முக்கியமாக குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு இது சிறந்த விரதமாகும்.

கந்தசஷ்டி விரத பலன்கள் :

🌟கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.

🌟விரதத்தை கடைபிடிக்க, பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.

🌟கந்தசஷ்டி விரத வழிபாடு செய்து முருகனிடம் வேண்டினால், கேட்டதை பெறலாம்.

🌟கந்தசஷ்டி விரதம் ஐஸ்வர்யத்தை தரக்கூடியது.

🌟கந்தசஷ்டி திதியில் விரதம் இருந்தால் விரும்பிய அனைத்தையும் பெறலாம்.

🌟16 பேறுகளையும் அளிக்கும் வல்லமை கந்தசஷ்டி விரதத்திற்கு உண்டு.

🌟குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிப்பது நன்று.

🌟குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளலாம்.

🌟கந்தசஷ்டி விரதத்தினை கடைபிடித்தால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய அனைத்தும் நிச்சயம் கைகூடும்.




Share this valuable content with your friends