No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Jul 31, 2018   Ananthi   480    நவ கிரகங்கள் 

👉 சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். தன்னுடைய சொந்த வீட்டில் அதாவது தனது ஆட்சி வீட்டில் இருக்கும் போது மிகுந்த பலம் பெறுகிறார். இனி சிம்மத்தில் சூரியன் இருக்கும் போது ஏற்படும் பலன்கள் பின்வருமாறு :

👉 கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள்.

👉 பார்வையிலேயே அனைவரையும் பயப்படுத்தக்கூடியவர்கள்.

👉 தேவையற்ற வீண் பேச்சுகளை விரும்பாதவர்கள்.

👉 எடுத்த காரியத்தை முடிப்பதில் மிகுந்த வேகம் கொண்டவர்கள்.

👉 எல்லாம் தெரிந்தாலும் எதையும் தெரியும் என்று கூற மாட்டார்கள்.

👉 அலட்சியமாக இருப்பார்கள். ஆனால், அனைத்தையும் கவனிக்கக்கூடியவர்கள்.

👉 இவர்கள் எடுத்த முடிவை எளிதில் மாற்றமாட்டார்கள்.

👉 நபர்களை அறிந்து பணி கொடுப்பதில் வல்லவர்கள்.

👉 பெருந்தன்மையையும், நேர்மையான குணத்தையும் கொண்டவர்கள்.

👉 அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்கள்.

👉 ஒப்பனை செய்து கொள்வதில் விருப்பம் உடையவர்கள்.

👉 ஆழ்ந்த சிந்தனைக்கு பின்னே எதையும் பேசக் கூடியவர்கள்.

👉 எந்நிலையிலும் வளைந்து கொடுக்காத நேர்மையான குணத்தைக் கொண்டவர்கள்.

👉 பக்தி கொண்டவர்கள். ஆனால், அதை வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள்.


Share this valuable content with your friends