No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உங்கள் கையில் பணம் எப்போதும் புரள வேண்டுமா?

Oct 12, 2019   Ananthi   401    ஆன்மிகம் 

🌟 இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே. பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது.

🌟 செல்வத்தை அள்ளித்தருவதில் மகாலட்சுமிக்கு ஈடு இணை இல்லை என்றுதான் கூறுவார்கள் நம் முன்னோர்கள்.

🌟 நமது முன்னோர்கள் கூறிய தாந்த்ரீக பரிகார முறைகள் பல உள்ளன.

🌟 இதனை நம்பிக்கையுடன் கடைபிடிப்பதால் மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள் ஆகாவிட்டாலும், தற்போது இருக்கின்ற பொருளாதார கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கையை சுலபமாக நடத்துவதற்கான செல்வத்தை பெற முடியும்.

🌟 தற்போது உங்கள் கையில் எப்போதும் பணம் புரள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தை எப்படி செய்யலாம்?... என பார்ப்போம்.

பரிகார முறை :

🌟 புதன்கிழமை அன்று ஐந்து வெற்றிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

🌟 அந்த வெற்றிலைகள் அனைத்தும் காம்புகளுடன் இருக்க வேண்டும். வெற்றிலையின் கீழ்நுனிப்பகுதி கூர்மையாக இருப்பது அவசியமாகும்.

🌟 புதன்கிழமை அன்று மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளாக உங்கள் பூஜை அறையில் வடக்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு, அந்த ஐந்து வெற்றிலைகளிலும் சிறிது அளவு பசு நெய்யினை நன்றாக இலைகள் முழுவதும் தடவ வேண்டும்.

🌟 பிறகு அந்த வெற்றிலைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும்.

🌟 ஒரு கைக்குட்டை அளவிலான தூய்மையான பட்டுத்துணியை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

🌟 அந்த பட்டுத்துணியில் இந்த ஐந்து வெற்றிலைகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, இந்த வெற்றிலைகள் முழுவதும் மறைக்குமாறு நான்கு புறமும் நன்றாக மூடி, ஒரு சிகப்பு நிற நூல் கொண்டு வெற்றிலை முடிந்திருக்கும் பட்டுத்துணி மடிப்பை கட்டி முடிந்து கொள்ள வேண்டும்.

🌟 இதன் பிறகு இந்த வெற்றிலைகள் அடங்கிய பட்டுத்துணி மடிப்பை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் அலமாரியில் வைக்க வேண்டும். (அல்லது) உங்கள் தொழில், வியாபாரங்கள் நடைபெறும் இடங்களில் இருக்கும் பணப்பெட்டியில் வைக்க வேண்டும்.

🌟 உங்கள் வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறை ஏற்படாமல் காக்க மறக்காமல் இந்த பரிகாரத்தை செய்து செல்வ செழிப்புடன் வாழுங்கள்.

Tagged  amount

Share this valuable content with your friends


Tags

mamanar புளியோதரை karupanar ஒரு மலை மீது ஏறி சிவபெருமான் சந்திரன் மீது கோபம் அடைந்து போர் தொடுத்தல் எனிட் பிளைட்டன் vinayagar chathurthi மார்கழி மாதம் ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்..? மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தன்னம்பிக்கை அதிகரிக்கும் லக்னத்தில் சந்திரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!! மார்ச் 03 தெய்வங்களுக்கு ஏற்ற தீப வழிபாடுகள் மலம் கழிப்பது போல் கனவு விருச்சிக ராசியில் சூரியனும் ஆண் குழந்தைக்கு முதல் முடி 17வது மாதம் எடுக்கலாமா? சமையல் அறையில் உள்ள தொட்டி எந்த மூலையில் அமைய வேண்டும்? ஆனி மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! பிள்ளையாருக்கு பூஜை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தந்தை இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?