No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உயில் சொத்துக்கும் வாஸ்துவுக்கும் என்ன தொடர்பு?

Jul 30, 2018   Ananthi   362    வாஸ்து 

ஒரு வீட்டில் தந்தையானவர் நிறைய சொத்துக்களை சம்பாதிக்கிறார், நல்ல வசதி வாய்ப்பாக இருக்கிறார். ஒரு நாள் தனது மகன் செய்யும் தொழிலில் மிக பெரிய சரிவு ஏற்படுகிறது. அன்று வரை அந்த குடும்பத்தில் அப்படி ஒரு இழப்பையே அவர்கள் பார்த்ததில்லை. அன்று முதல் தனது மகன் மீதுள்ள நம்பிக்கையை அவர் இழந்து விடுகிறார். அதற்கேற்றார் போல் அவருடைய மகன் மீண்டும், மீண்டும் செய்யும் அனைத்து தொழிலும் நஷ்டத்தை சந்திக்கிறார்.

இது போன்ற சூழ்நிலையில் தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் தனது மகன் இழந்து விடுவான் என்று அவர் முடிவெடுத்து தனது மகனின் வாரிசான தன்னுடைய பேரனுக்கு தனது சொத்து முழுவதையும் உயிலாக எழுதி வைத்துவிடுகிறார். பிறகு தனது மகன் வாழ்நாள் முழுவதும் வறுமையுடனும், கடனுடனும், கஷ்டத்துடனும் தனது வாழ்க்கையை நகர்த்த வேண்டி வந்து விடுகிறது. இந்த பேரன் என்பவன் எப்போது வளர்வது, அவர் எப்போது அந்த சொத்தை விற்பது அல்லது அனுபவிப்பது...?

இது போன்ற சூழ்நிலை ஒரு வீட்டில் ஏற்படுவதற்கு அந்த வீட்டு அமைப்பில் அப்படி என்ன தவறுகள்.

1. வடகிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு

2. வடகிழக்கு படி அமைப்பு

3. வடகிழக்கு சமையலறை ரூ பூஜையறை

4. வடகிழக்கு கழிவறைகள்

5. வடகிழக்கு குடோன்

6. தென்மேற்கு சமையலறை

7. தென்மேற்கு வரவேற்பறை

8. தென்மேற்கு பூஜையறை

9. பிரம்பஸ்தானத்தில் திறந்தவெளி

10. வடக்கு ஒட்டிய கட்டிட அமைப்புகள்

11. தென்மேற்கு சரிவான பூமி அமைப்பு

12. தென்மேற்கு வாசல் அமைப்பு

13. தென்மேற்கு தெருகுத்து

மேலே குறிப்பிட்ட இதுபோல அமைப்புகள் உள்ள வீடுகளில் ஆண்வாரிசுகளுக்கு வருமானம் இருக்காது. இதுபோல சூழ்நிலைகளில் தான் இப்படியொரு உயில் சம்பவம் நடக்கும்.


Share this valuable content with your friends