No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டிற்கு தலைவாசல் உச்சத்தில் அமைப்பது அவசியமா?

Sep 24, 2019   Malini   363    வாஸ்து 

🏠ஒரு வீட்டிற்கு தலைவாசல் உச்சத்தில் அமைப்பது அவசியம். ஒரு மனிதனுக்கு மூளை எவ்வளவு அவசியமோ அதுபோல வீட்டிற்கு தலைவாசல்.

🏠ஒரு வீட்டிற்கோ அல்லது தொழில் நிறுவனத்திற்கோ அமைக்கப்படும் தலைவாசல் ஒன்று, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைக்க வேண்டும். மேலும், கட்டிடத்திற்குள் அமைக்கும்போது அறைகளின் வாசல்களும் உச்சத்தில்தான் அமைக்கப்பட வேண்டும்.

🏠வடக்கு பார்த்த கட்டிடத்திற்கு தலைவாசல் வடக்கு திசையில் கிழக்கு ஒட்டியும்,

🏠கிழக்கு பார்த்த கட்டிடத்திற்கு தலைவாசல் கிழக்கு திசையில் வடக்கு ஒட்டியும்,

🏠தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தலைவாசல் தெற்கு திசையில் கிழக்கு ஒட்டியும்,

🏠மேற்கு பார்த்த கட்டிடத்திற்கு தலைவாசல் மேற்கு திசையில் வடக்கு ஒட்டியும் அமைக்க வேண்டும்.

🏠மக்கள் அறியாமையால் வீட்டை புதுப்பிக்கும்போது அல்லது வீட்டை விரிவாக்கம் செய்யும்போது வாஸ்து விதிக்கு உட்படாமல் தங்கள் வசதிக்கு கட்டி கெடுபலனை பெறுகிறார்கள். உதாரணத்திற்கு

🏠தென்மேற்கு மூலை படிக்கட்டு

🏠வடகிழக்கு பில்லர் போட்ட படிக்கட்டு

🏠படிக்கட்டு கீழ் டாய்லெட் அமைப்பு.

🏠சதுரம், செவ்வகம் இல்லாமல் வேறு வடிவில் அமைத்து விடுவது.

🏠சில நபர்கள் பணம் கையில் வரும்போது வீட்டை விரிவாக்கம் செய்வார்கள். அவர்கள் தென்மேற்கு மூலையிலோ, வடமேற்கு மூலையிலோ, தென்கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ ஒரு அறையை உருவாக்கும்போது அந்த வீடு சதுரம், செவ்வகம் அமைப்பை மீறி ஏதாவது ஒரு மூலை நீண்டோ அல்லது குறைந்தோ அமையப்பெறும். அதனால் அவர்களுக்கு கெடுபலன் தான் ஏற்படும்.

🏠வாஸ்துபடி வீட்டை அமைத்து 'நம் நல்வாழ்வு நம் கையில்' என்ற கூற்றுப்படி வாழ்வோம்.

Tagged  thalaivasal

Share this valuable content with your friends


Tags

மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்காதவர்கள்... யார் இவர்கள்? வாஸ்துப்படி வடமேற்கு பகுதியில் வரக்கூடாத அமைப்புகள்...!! நான் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாணாசுரன் பேனா வாங்குவது போல் கனவு கண்டால் சாவித்ரி கௌரி விரதம் வார ராசிபலன் (18.01.2021 - 24.01.2021) PDF வடிவில் !! palankal மேஷ லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? வாங்குவதும் நல்லதா? மிதுன லக்னம். எனக்கு தாய் வழி உறவில் திருமணம் நடக்குமா? பபுதன் tamil mionth பெண் திருமணம் செய்து கொள்ளலாமா? மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் திதி கொடுக்கலாமா? எரிமலை வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? thiruvathiraiviratham அமாவாசையில் புதிய தொழில் தொடங்கலாமா? daily rasipalan 01.04.2020 in pdf format aniruththan