No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துவின் அதிமுக்கியமான விதிகள்..!!

Sep 24, 2019   Malini   447    வாஸ்து 

🏠இப்பொழுது இருக்கும் வாழ்க்கை சூழ்நிலையில் மக்கள் இயற்கையோடு ஒன்றிய வாஸ்துவை கடைபிடிக்க தவறி பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள். எதை கடைபிடிக்காவிட்டாலும் வாஸ்துவின் இந்த முதன்மையான விதிகளை நிச்சயமாக கடைபிடித்து வெற்றியை பெற்றுக்கொள்ளுங்கள்.

🏠வீட்டில் வடக்கிலும், கிழக்கிலும் அதிக காலியிடம் இருக்க வேண்டும்.

🏠வீட்டின் வடக்கிலும், கிழக்கிலும் உச்ச பகுதியான வடக்கு சுவரில் கிழக்கு ஒட்டிய ஜன்னலும், கிழக்கு சுவரில் வடக்கு ஒட்டிய ஜன்னலும் அமைக்க வேண்டும்.

🏠வடகிழக்கு பகுதியில் பாரம் இல்லாமல் இருக்க வேண்டும்.

🏠வடகிழக்கு பகுதியில் சமையலறை, பூஜையறை, பெட்ரூம் போன்றவை அமைக்கக்கூடாது.

🏠வடகிழக்கு பகுதியில் இருக்கும் அறையை படிக்கும் அறையாக பயன்படுத்த வேண்டும்.

🏠தென்மேற்கு மூலையில் பெட்ரூம் அமைத்துவிட்டு அந்த பெட்ரூமில் வடகிழக்கில் டாய்லெட் அமைக்கக்கூடாது.

🏠வடகிழக்கில் படிக்கட்டு, மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கக்கூடாது.

🏠வடகிழக்கு மூலையில் மின்சார இணைப்பு பெட்டி அமைக்கக்கூடாது.

🏠வடகிழக்கு சரிவர இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும்.

🏠தோல் சம்பந்தப்பட்ட வியாதி, கண் நோய், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வடகிழக்கு குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

🏠வடகிழக்கு கட்டமைப்பு, வடக்கு காம்பவுண்ட் இல்லாமல் இருக்கும் அமைப்பால் மனநோய், மன அழுத்தம், அண்டை அயலாருடன் சண்டை சச்சரவு, பொருளாதார குறைபாடு, தேவையில்லாத செலவுகள், குழந்தைகள் படிப்பில் ஆர்வம் குறைதல், தீய பழக்கவழக்கங்கள், கடன் பிரச்சனைகள், வேலை இல்லாமை, கணவன்-மனைவி வாழ்க்கையில் கருத்து வேறுபாடு, பணம் வீட்டில் தங்காமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகையால் மேற்கண்ட விதிகளை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.

🏠ஒருவரின் வீட்டில் வடக்கு, கிழக்கு சரிவர இருந்தால் எதையும் எதிர்கொள்ள தைரியம் கிடைக்கும்.


Share this valuable content with your friends