No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாடு முட்ட வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 18, 2019   Malini   31698    கனவு பலன்கள் 

1. விதவைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 விதவைகளை கனவில் கண்டால் திட்டமிட்ட செயலில் ஒரு சிறிய செலவு செய்வதன் மூலம் நினைத்ததை விட சிறப்பான பலன் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. மாடு முட்ட வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடு முட்ட வருவது போல் கனவு கண்டால் வாகனப் பயணங்களில் மிகுந்த கவனம் தேவை.

3. திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. தங்க நகையை கழட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்க நகையை கழட்டுவது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் புரிதல் உணர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளால் மனக்கசப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. குடும்பத்தில் ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?


🌟 குடும்பத்தில் ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends