No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா?

Sep 18, 2019   Malini   708    ஜோதிடர் பதில்கள் 

1. புரட்டாசி மாதத்தில் தொழில் தொடங்கலாமா?

🌟 புரட்டாசி மாதத்தில் தொழில் தொடங்கலாம்.

🌟 சுபமான நட்சத்திரம் மற்றும் திதியை பார்த்து தொழிலை தொடங்கவும்.

🌟 புரட்டாசி மாதத்தின் அதிபதியான பெருமாளை வணங்கி தொழிலை ஆரம்பித்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

2. புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாமா?

🌟 கருவுற்ற பெண்ணின் ஒற்றைப்படை மாதமாக புரட்டாசி மாதம் இருக்கும் பட்சத்தில் தாராளமாக வளைகாப்பு வைக்கலாம்.

3. புரட்டாசி மாதத்தில் குலதெய்வ கோவிலில் ஆடு பலியிட்டு மொட்டை போடலாமா?

🌟 புரட்டாசி மாதத்தில் குலதெய்வ கோவிலில் ஆடு பலியிட்டு மொட்டை போடுதல் கூடாது.

🌟 புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

4. புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 எல்லா மாதங்களிலும், எல்லா குழந்தைகளும் பிறக்கலாம். குழந்தை பிறப்பிற்கு லக்னம் என்பதே முக்கியமாகும்.

5. புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போவதை தவிர்க்கவும்.

6. புரட்டாசி மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்யலாமா?

🌟 புரட்டாசி மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்யலாம்.

7. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?

🌟 புரட்டாசி என்பது வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பிவிடும்.

🌟 புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படுவதால் செரிமான குறைவும், வயிறு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

🌟 அதனால் தான் நம் முன்னோர்கள் பெருமாளை வழிபட்டு துளசி நீரை பருகச் சொன்னார்கள்.


Share this valuable content with your friends