No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலில் தீபம் ஏற்றும்போது ஒரு விளக்கை ஏற்ற வேண்டுமா? அல்லது இரண்டு விளக்கை ஏற்ற வேண்டுமா?

Jul 10, 2018   Suganya   633    ஜோதிடர் பதில்கள் 

1. கடக லக்னத்தில் ராகு, ஏழாம் இடமான மகரத்தில் கேது, செவ்வாய் மற்றும் புதன் இணைந்திருக்கிறது. இதற்கு என்ன பலன்?

💢 வாதத்திறமையில் வல்லவர்கள்.

💢 அறிவாற்றல் உடையவர்கள்.

💢 செல்வ வளம் உடையவர்கள்.

💢 இரகசியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

2. என் தந்தை இறந்து ஆறு மாதம் ஆகின்றது. இரண்டு மாதங்கள் அடைப்பு இருப்பதாக கூறினார்கள். ஆனால், நான் எதுவும் செய்யவில்லை. இதனால் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா?

💢 அடைப்பு இருந்து அதற்கான செயல்களை செய்யாவிடில் பாதிப்புகள் உண்டாகும்.

💢 எனவே, குடும்பத்தில் உள்ள பெரியோர்களை அணுகி தகுந்த ஆலோசனைகளை பெற்று அதற்கான செயல்களை செய்யவும்.

3. முகூர்த்தம் எழுதியவுடன் மணமகள் மற்றும் மணமகன் ஏன் பார்த்து கொள்ளக்கூடாது?

💢 முகூர்த்தம் எழுதியவுடன் மணமகள் மற்றும் மணமகன் பார்த்து கொள்ளக்கூடாது என்பது பின்னாளில் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு அதை தவிர்க்கும் பொருட்டே பின்பற்றப்படுகின்றது.

💢 மணமகள் - மணமகன் பார்த்து கொள்ளக்கூடாது என்பது ஒவ்வொரு குலவழக்கத்தின் படி பின்பற்றக்கூடியதாகும்.

4. நான்கு மாதங்கள் வித்தியாசம் உள்ள வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா?

💢 மணப் பெண்ணிற்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் பெரியோர்களின் சம்மதத்துடன் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.

5. குரு ஆறாமிடமும், சனி எட்டாம் இடமும் இருந்தால் என்ன பலன்?

💢 செலவுகள் அதிகம் செய்யக்கூடியவர்கள்.

💢 வாக்கு பலிதம் கொண்டவர்கள்.

💢 எண்ணிய செயல்களை சாதிக்கக்கூடியவர்கள்.

💢 பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

6. கோவிலில் தீபம் ஏற்றும்போது ஒரு விளக்கை ஏற்ற வேண்டுமா? அல்லது இரண்டு விளக்கை ஏற்ற வேண்டுமா?

💢 கோவிலில் தீபம் ஏற்றும்போது இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

7. சிவன் சிலையை வீட்டில் வைக்கலாமா?

💢 சிவன் சிலையை வீட்டில் வைக்கலாம். ஒரு அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

8. நாகதோஷம் உள்ள ஆணுக்கு, களத்திர தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

💢 நாகதோஷம் உள்ள ஆணுக்கு, களத்திர தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கூடாது.


Share this valuable content with your friends