No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாழை இலையில் சைவ சாப்பாடு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 14, 2019   Ananthi   15246    கனவு பலன்கள் 

1. பால் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பால் கொட்டுவது போல் கனவு கண்டால் மற்றவர்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்படவேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. எண்ணெய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எண்ணெய் வாங்குவது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து மகிழ்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

3. குடும்பத்தில் சண்டை போட்டு பிரிந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு பிடித்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. புதிய பாத்திரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புதிய பாத்திரத்தை கனவில் கண்டால் சில மாற்றங்கள் மூலம் புதுவிதமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. எனது நண்பர் வேறொரு நபரிடம் பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. வாழை இலையில் சைவ சாப்பாடு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. இறந்தவர் வந்து பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர் வந்து பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends