No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எட்டில் சனி இருந்தால் என்ன பலன்?

Apr 17, 2019   Ananthi   3320    ஜோதிடர் பதில்கள் 

1. ஜோதிடம் என்பது உண்மையா?

🌟 ஜோதிடம் என்பது உண்மை. கண்களுக்கு புலப்படுபவை மட்டும் உண்மையல்ல.

🌟 கண்களுக்கு புலப்படாத பல விஷயங்கள், கற்பனைக்கு எட்டாத பல உண்மைகள் இருக்கின்றன. அதை போன்றது தான் ஜோதிடம்.

2. லக்னத்திற்கு 10ல் சுக்கிரன் மற்றும் சந்திரன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 அழகான உடல் அமைப்பை உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 புத்தி சாதுர்யம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஐந்து பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 ஐந்து பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்.

🌟 மேலும், பாவக ரீதியான ஆய்வுகளை பார்க்கவும்.

4. கோவிலைச் சுற்றி அங்கப் பிரதட்சணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. 9 மாத குழந்தைக்கு (பையன்) முதல் மொட்டை அடிக்கலாமா?

🌟 ஒரு வருடம் முடிந்த பின்பு குழந்தைக்கு மொட்டை அடிக்கவும்.

6. கேது திசை, ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 தம்பதிகளுக்கிடையே பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 பகைவர்களால் மனவருத்தங்கள் ஏற்படும்.

🌟 எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. எட்டில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 தீர்க்கமான ஆயுள் உடையவர்கள்.

🌟 பல கலைகளில் திறமை உடையவர்கள்.

🌟 விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends