No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தென்னை மரம் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 29, 2019   Ananthi   1917    கனவு பலன்கள் 

1. தென்னை மரம் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தென்னை மரம் ஏறுவது போல் கனவு கண்டால் மனதில் திட்டமிட்டு செயல்படுத்திய எண்ணம் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்து போன விஷயங்களில் மேற்கொண்டு சில பிரச்சனைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பேன் வாரி எடுப்பது போல் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மறைமுகமாக இருந்து வந்த சில எதிர்ப்புகள் விலகும்.

4. வீட்டில் பல பிரச்சனைகளும், அடுத்தடுத்து உறவினர்கள் இறப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் மற்றும் மனதில் இருந்து வந்த பல பிரச்சனைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. குரங்கு என் தலையில் கடிப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. வீட்டில் வெல்லம் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட கால விருப்பங்கள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends