No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ஜோதி தரிசனம்..!!

Jan 18, 2019   Chandrakala   397    ஆன்மிகம் 

🔥 மகிசீ என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்தார். அதற்காக பிரம்மாவை நோக்கி தவம் செய்தார். அதனால் மகிழ்ந்த பிரம்மா சிவனுக்கும், திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் அளித்தார்.

🔥 பாற்கடலில் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலவில்லை.

🔥 பின்னர் தியானம் களைந்து எழுந்தபொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அதனால் சிவபெருமானுக்காக விஷ்ணு, மோகினியாக மீண்டும் அவதரித்தபொழுது சிவனுக்கும், மோகினிக்கும் பிறந்தவரே ஐயப்பன். இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) - ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு.

🔥 குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர். அந்த சமயத்தில் வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் மரத்தடியில் தேஜசுடன் குழந்தை ஐயப்பனை கண்டார். அந்த குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றார். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர்.

🔥 பிறகு ஐயப்பனை குருகுலத்தில் சேர்க்க மன்னன் முடிவு செய்தார். தெய்வக்குழந்தையான ஐயப்பன் குறுகிய காலத்திலேயே நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், 64 கலைகள் ஆகிய அனைத்தையும் கற்று தேர்ந்தார்.

🔥 பிறவியிலேயே ஊமையாக குருகுலத்தில் இருந்த குருவின் மகனான கண்ணனை மணிகண்டன் பேசவைத்தார். மணிகண்டனின் அபூர்வ சக்திகளையும், செயல்களையும் கண்ட குரு அவரை தாங்கள் யார்? என்பதனை அறிய விரும்புவதாக கூறினார். குருவுக்கு உண்மையை மறைக்க விரும்பாத மணிகண்டன் தான் யார் என்பதை கூறி அதனை இரகசியமாக வைத்திருக்க வேண்டினார். அத்துடன் குருதட்சணையாக ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தில் ஜோதி சொரூபனாக காட்சி தருவதாக கூறினார்.

🔥 இதனால் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்றைய தினம் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சி தருவார்.


Share this valuable content with your friends


Tags

அசுர குல கோவிலில் பிரசாதம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 23.08.2020 rasipalan in pdf format உங்களுக்கு முன்கோபம் வருகிறதா? rasipalan - 24.08.2018 kulam கிரகப்பிரவேசம் சிவன் கோவில் நாய் இறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மு.சி.பூர்ணலிங்கம் Tuesday Horoscope - 03.07.2018 என் மகனிற்கு வலது ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்? வரலட்சுமி விரதத்தின் பலன்கள் மணிப்பூரகம் ஒருவரின் ஜாதகத்தை வைத்து நோய்களை கண்டறிய முடியுமா? தை மாதத்தில் கணபதி ஹோமம் செய்யலாமா? பெண்ணை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுக்கிர திசை சிம்மம் லக்னம். ஆண் மிதுன ராசி. இருவரும் திருமணம் செய்யலாமா? 07.12.2020 - 13.11.2020 weekly rasipalan in PDF Format!!