No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

Jan 12, 2019   Ananthi   2410    கனவு பலன்கள் 

1. வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்த பிரிவினை நீங்கி ஒற்றுமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

2. என்னிடம் பேசாதவர்கள் காசு கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்களிடம் பேசாதவர்கள் காசு கேட்பது போல் கனவு கண்டால் பொருளாதார நெருக்கடியான சூழல் உண்டாகும்.

3. தாம்பூலத்தில் இருக்கும் வெற்றிலைகளில் இருந்து அழுகிய இலைகளை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பணிகளில் இருந்து வந்த தடைகளை அறிந்து அதை சரி செய்வதற்கான சூழல் உண்டாகும்.

4. குழந்தையை தூக்கி வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையை தூக்கி வைத்திருப்பது போல் கனவு கண்டால் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

5. பாம்பு மீது பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு மீது பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் நினைத்த காரியத்தில் இருந்து வந்த தடைகள் அகலும்.


Share this valuable content with your friends