கேள்வி :
🌟 பூஜையறை எந்த திசையை பார்த்து இருந்தால், அது ஒரு நிரந்தர பண வரவை ஏற்படுத்திக் கொடுக்கும். மேற்கு திசை அல்லது தெற்கு திசையை பார்த்து இருந்தால் கடன் வருமா? கடனை ஏற்படுத்தக்கூடிய பூஜை அமைப்பின் தவறுகள் என்னென்ன?
பதில் :
🌟 ஒரு வீட்டில் பூஜையறையை சரியாக அமைத்துக்கொண்டால் உழைப்பில்லாமல் தடையில்லாமல் பணம் வந்து கொண்டே இருக்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து.
🌟 நான் இங்கு குறிப்பிடும்படியான விஷயங்களை நீங்கள் கடைபிடிக்காமல் இருந்தால் வீட்டில் கடன் என்பது உறுதி.
🌟 உங்களுடைய இடம் சதுரம், செவ்வகமாக இருக்க வேண்டும்.
🌟 வீட்டின் உள் அமைப்பு வடகிழக்கு வரவேற்பறை, தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம், தென்கிழக்கில் சமையலறை, வடமேற்கு கழிவறைகள் இருக்க வேண்டும்.
🌟 அனைத்து வாசல்களும், ஜன்னல்களும் உச்சப்பகுதியில் இருக்க வேண்டும்.
🌟 தரைக்குகீழ் தண்ணீர் அமைப்பு அனைத்தும் வடகிழக்கிலும், தரைக்கு மேல் தண்ணீர் தொட்டி அமைப்பு அனைத்தும் தென்மேற்கு பகுதியில் மட்டும் வர வேண்டும்.
🌟 படி அமைப்புகள் அனைத்தும் வடகிழக்கு ஒரு பகுதியை தவிர மற்ற மூன்று பகுதியில் வெளிப்புற படியாக அமைத்துக்கொள்ளலாம்.
🌟 வீட்டின் உட்பகுதி தெற்கு நடுப்பகுதி, மேற்கு நடுப்பகுதியில் வர வேண்டும்.
🌟 நான்கு புறமும் அவசியம் மதில் வரவேண்டும்.
🌟 வடக்கு, கிழக்கு இரண்டு பகுதிகளில் அதிக காலி இடம் இருக்க வேண்டும்.
🌟 கழிவுநீர் குழி வடமேற்கில் மட்டும் வரவேண்டும்.
🌟 தெருக்குத்து, தெருப்பார்வைகள் உச்சத்தில் மட்டுமே வரவேண்டும்.
🌟 பூஜையறை வடகிழக்கு மூலை, தென்மேற்கு மூலை இந்த பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் வடக்கு பார்த்து அல்லது கிழக்கு பார்த்து வரவேண்டும்.
🌟 இங்கு குறிப்பிடும்படியான அமைப்புகளை நீங்கள் கடைபிடித்தால் உங்களுக்கு கடன் என்பது உங்களுடைய வாழ்நாளிலே வராது.