No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழி மாதம் பற்றிய தவறான அபிப்ராயம்!!...

Dec 25, 2018   Ananthi   511    ஆன்மிகம் 

🌟 வருஷத்தில் முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும் சுபநாட்கள் என்று சொல்ல முடியாது. எந்த நாளில் சுப கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கிறதோ அந்த நாளை சுப நாள் என்று சொல்கிறோம். சுப நாள் என்று வருகின்ற போது அது மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடத்துவதற்குரிய நிகழ்வுகளுக்காகவும் சமுதாயத்தில் அனைவரும் கூடி விழாவாக கொண்டாடுவதற்காகவும் சில சுபநாட்கள் இருக்கின்றது. மனிதர்களுக்கு என்று தனியாக இருப்பது போல தெய்வங்களை நினைத்து நன்றி கடன் செலுத்தவும், பிரார்த்தனைகள் வைக்கவும் என்றே சில நாட்கள் இருக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாதம் தான் மார்கழி மாதம்.

🌟 மார்கழி மாதம் பீடை மாதம் என்பதெல்லாம் கிடையாது. அது தனுர் மாதம். பீடை என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் ஆரோக்கியத்திற்கு உரிய மாதம் மார்கழி மாதம்.

🌟 தட்சணாயணம் மார்கழி மாதத்துடன் முடிகிறது. அதாவது சூரியனுடைய தென் பகுதி இயக்கம் இந்த மாதத்துடன் முடிகிறது. இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதால், நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. அதனால்தான் இந்த மாதத்தை இப்படி ஒதுக்கி வைத்தார்கள்.

🌟 இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு சில பிரச்சனைகளைத் தரக்கூடியது. அதனால் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மீகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது.

🌟 மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம் தான். பீடை மாதம் என்பதன் அர்த்தத்தை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். பீடுடைய மாதம் என்பதே நாளடைவில் மருவி பீடை மாதம் என்றாகிவிட்டது. பீடுடைய என்றால் செல்வம் பொருந்திய, சிறப்புக்கள் நிரம்பிய என்று அர்த்தம். மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மாவே கூறியிருக்கிறார் என்றால் அதன் சிறப்பை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

🌟 நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளின் விடியற்காலை பொழுதாகும். விடியற்காலை என்றாலே மங்களகரமானது தானே? எனவே இந்த பெருமை பொருந்திய மாதம் முழுவதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வட மொழியில் சொல்வர். மார்கம் என்றால் - வழி, சீர்ஷம் என்றால் - உயர்ந்த வழிகளுக்குள் தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது.


Share this valuable content with your friends


Tags

10ம் அதிபதி 2ல் இருந்தால் என்ன பலன்? ஓரை பக்கத்து வீட்டு அமைப்புகள் நம்மை பாதிக்குமா? வேடனின் மனமாற்றம் : ராகு பிரம்ம முகூர்த்தம் மரண யோகமாக இருந்தால் புதிய வீட்டிற்கு பால் காய்ச்சலாமா? பாலடைந்த வீட்டை கனவில் கண்டால் என்ன பலன்? மரண யோகத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன் மற்றும் பரிகாரம் என்ன? falls kammal இரமண மகரிஷி பங்குனி மாத ராசிபலன்கள் chithiraleegai daily horoscope 03.04.2020 in pdf format முருகனின் வேல்-ஐ கனவில் கண்டால் என்ன பலன்? வீடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மின் கம்பத்திலிருந்து நெருப்பு என் மீது விழுந்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாய் புத்தி நடந்தால் என்ன பலன்? ஆனி பங்குனி மாதம் புதிய வீடு குடிப்போகலாமா?