No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்களுக்கு மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

Dec 24, 2018   Ananthi   466    ஜோதிடர் பதில்கள் 

1. நான் சிம்ம ராசி, ரிஷப லக்னம். லக்னத்தில் ராகுவும், சனியும் உள்ளது. இதற்கு என்ன பலன்?

🌟 மற்றவர்களை ஈர்க்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் கலை ரசனை உடையவர்கள்.

🌟 ஆயுள் பலம் உடையவர்கள்.

🌟 எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. என் கணவர் மற்றும் மகளுக்கு தனுசு ராசி. இதனால் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படுமா?

🌟 உங்கள் கணவர் மற்றும் மகளுக்கு தனுசு ராசியாக இருந்தால் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.

🌟 மாதம் ஒருமுறையாவது குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.

3. பெண்ணிற்கு இடது உள்ளங்கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 முன்கோப குணம் உடையவர்கள்.

🌟 குறைந்த நண்பர்களை உடையவர்கள்.

🌟 நேர்மையான குணநலன்கள் மூலம் எதிர்ப்புகளை சந்திக்கக்கூடியவர்கள்.

4. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் 2-ம் வீட்டில் கேதுவும், 8-ம் வீட்டில் ராகு மற்றும் சனி சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌟 ஆரோக்கியம் சார்ந்த சில பிரச்சனைகள் தோன்றி மறையும்.

🌟 எதிலும் புதுமையான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 குறுகிய கண்ணோட்டம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. பெண்களுக்கு மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.

🌟 அமைதியான குணநலன்களை உடையவர்கள்.

6. பெண்ணின் வலது உள்ளங்கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 அமைதியான குணம் உடையவர்கள்.

🌟 சண்டைகளை விரும்பாதவர்கள்.

🌟 அனைவரிடத்திலும் அனுசரித்துச் செல்லக்கூடியவர்கள்.

7. சந்திர கிரகணம் நடைபெறும் போது கிரிவலம் செல்லலாமா?

🌟 சந்திர கிரகணம் நடைபெறும் போது கிரிவலம் செல்லலாம். ஆனால், கிரகணம் தொடங்குவதற்கு முன்னதாக கிரிவலத்தை முடித்து வீடு திரும்பிவிட வேண்டும்.

Tagged  nose

Share this valuable content with your friends