No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் மூன்று காமாட்சி விளக்குகள் ஏற்றலாமா?

Dec 08, 2018   Ananthi   637    ஜோதிடர் பதில்கள் 

1. வராகி அம்மனை வீட்டில் எப்படி வழிபட வேண்டும்?

🌟 வராகி அம்மனுக்கான நெய்வேத்தியங்களை படைத்து எப்போதும் போல தீப தூபம் செய்து வழிபடவும்.

2. சுமங்கலி பெண்கள் அமாவாசை நாட்களில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்கலாமா?

🌟 மாமனார், மாமியார் இல்லாத சுமங்கலி பெண்கள் அமாவாசை நாட்களில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்கலாம்.

3. வீட்டில் மூன்று காமாட்சி விளக்குகள் ஏற்றலாமா?

🌟 வீட்டில் இரண்டு காமாட்சி விளக்குகள் ஏற்றுவது நல்லது.

4. கடக லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எழில் மிகு தோற்றம் உடையவர்கள்.

🌟 சுபபோக வாழ்க்கை வாழ்பவர்கள்.

🌟 வாகனச் சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஒரு வீட்டின் முதல் மாடியை 2 வீடுகளாக பிரிப்பதற்கு மனையடி சாஸ்திரம் பார்க்க வேண்டுமா?

🌟 ஒரு வீட்டின் முதல் மாடியை 2 வீடுகளாக பிரிப்பதற்கு மனையடி சாஸ்திரம் பார்க்க வேண்டும்.

6. எனக்கு ஜெனன ஜாதகம் இல்லை. ருது ஜெனன ஜாதகம் மட்டும் தான் இருக்கிறது. ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவை எத்தனை சதவீதம் பலன்களை அளிக்கும்?

🌟 ருது மற்றும் ஜெனன ஜாதகம் 50 சதவீத பலன்களை அளிக்கும். மேற்கொண்டு அறிய பிரசன்ன ஜோதிட முறையை கொண்டு அறிந்து கொள்ளவும்.

7. கன்னி ராசி, ரிஷப லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கக்கூடியவர்கள்.

🌟 அனைவரிடத்திலும் பழகக்கூடியவர்கள்.

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 புதியவர்களிடம் தயக்க சுபாவம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends