No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




யாரை குருசாமி என்று அழைக்கிறோம்?

Nov 30, 2018   Ananthi   478    ஆன்மிகம் 

கார்த்திகை மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகுவார்கள். அவ்வாறு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ஐயப்பனுக்கு விரதம் அனுஷ்டிக்கும் முறை குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல்களை பார்க்கலாம்.

யாரை குருசாமி என்று அழைக்கிறோம்?

🌟 சபரிமலைக்கு பதினெட்டு முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி என்ற தகுதியை பெறுகிறார்கள். ஒரே ஆண்டில் பதினெட்டு முறை சென்றுவிட்டு வந்தால் அவர்களை குருசாமி என கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு கட்டு கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமியாக முடியும். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பமார்களுக்கு மாலை அணிவிக்கலாம். இவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடவில்லை என்றாலும் நாள்தோறும் ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும்.

கட்டு கட்டும் முறை :

🌟 நீலம், காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜைபொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும். துணியை இரண்டு பகுதிகளாக பிரித்து தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கற்கண்டு, உண்டியல் காசு ஆகியவற்றை வைக்க வேண்டும். பின்முடியில் தனக்கு தேவையான உணவுப்பொருளை வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை இருமுடி தலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கற்பூர தீபம் :

🌟 ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின்போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும்.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :

ஓம் மஹா ரூபாய நம
ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் உத் பலாகாராய நம

ஓம் காலஹந்த்ரே நம
ஓம் நராதிபாய நம
ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
ஓம் மதனாய நம.


Share this valuable content with your friends


Tags

27.09.2019 Rasipalan in pdf format!! வைஷ்ணவி பூஜை திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? வார ராசிபலன் (20.07.2020 -27.07.2020) PDF வடிவில் !! சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? வீட்டின் பூஜை அறையில் நான் சாமி கும்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சர்வதேச ரோமானியர்கள் தினம் 24.02.2019 Rasipalan in pdf format !! தட்டுக்கள் நிறைய மாமிசம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? explanation of kandha sashti kavasam மூலம் நட்சத்திரத்தினால் புகுந்த வீட்டில் ஏதேனும் உயிர் சேதம் வருமா? கிட்டூர் ராணி சென்னம்மா ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் seed விருப்பத்தை நிறைவேற்றும் நரசிம்மி பூஜை 05.03.2019 Rasipalan in PDF Format!! குழந்தைக்கு அம்மை போட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்? பணவரவு தரும் பஞ்சம சனி.! தந்தையரின் படத்தை எந்த திசையை பார்த்தவாறு மாற்றி வைக்க வேண்டும்? ரிஷப லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?