No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐப்பசி மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?

Nov 24, 2018   Ananthi   1862    ஜோதிடர் பதில்கள் 

1. 3-ல் கேது மற்றும் செவ்வாய் இருந்தால் அடுத்து பெண் குழந்தை தான் பிறக்குமா?

🌟 கிரக நிலைக்கு ஏற்பவும், தசாபுத்திக்கு தகுந்தாற்போலவும் தான் புத்திர பாக்கியம் உண்டாகும்.

2. சிம்ம ராசி, மகம் நட்சத்திரம், மகர லக்னம் உடையவர்கள் எந்த ராசிக்கற்கள் கொண்ட மோதிரம் அணிய வேண்டும்?

🌟 மகர லக்னம் கொண்டவர்கள் நீலக்கற்களை அணியலாம்.

🌟 ராசிக்கற்களை அணியும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

3. ஐப்பசி மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?

🌟 ஐப்பசி மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு பாதிப்பு ஏற்படாது.

🌟 அவரவர் சொந்த ஜாதகத்தின் அடிப்படையிலேயே பலன்கள் கிடைக்கும். குழந்தையின் ஜாதகம் தந்தையின் ஜாதகத்தில் சிறு மாற்றத்தை மட்டும் உருவாக்கும்.

4. நான் மிதுன லக்னம், சிம்ம ராசி. 5-ல் சனி திசை நடக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 பணிபுரியும் இடங்களில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும்.

🌟 மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

🌟 கூட்டுத் தொழில் மூலம் இலாபம் ஏற்படும்.

🌟 உயர் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் பாராட்டுகளை பெறுவீர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. விருச்சக லக்னத்திற்கு 2-ம் இடத்தில் சனி மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 குழப்பமான சூழ்நிலையை உடையவர்கள்.

🌟 விதண்டாவாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 அடிக்கடி பொருளாதார நெருக்கடி தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. எனக்கு சுத்த ஜாதகம், பெண்ணிற்கு 2-ம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 செவ்வாய் உள்ள ஜாதகத்திற்கு செவ்வாய் உள்ள ஜாதகத்தை இணைப்பதே சிறப்பை தரும்.

7. நான் கடக ராசி. லக்னத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 சோம்பேறித்தனம் உடையவர்கள்.

🌟 அலட்சிய குணம் கொண்டவர்கள்.

🌟 நிலையற்ற எண்ணம் உடையவர்கள்.

🌟 இரத்தம் தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends