No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிறப்பின் போது நட்சத்திரத்திற்கும், இறப்பின் போது திதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன்?

Nov 23, 2018   Chandrakala   514    ஜோதிடர் பதில்கள் 

1. மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம் உடைய ஆண், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம் உடைய பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 அதிபதி மற்றும் நட்சத்திர பொருத்தங்கள் சுமாரான அளவில் இருப்பதால் பாவக ரீதியான பொருத்தங்களை ஆய்வு செய்து திருமணம் செய்து கொள்ளவும்.

2. எனது தந்தை வைகாசி மாதம் இறைவனிடம் சேர்ந்தார். கிரகப்பிரவேசம் எப்போது செய்ய வேண்டும்?

🌟 மூன்று மாதம் கழித்து கிரகப்பிரவேசம் செய்து கொள்வது சிறந்தது.

3. நான் கும்ப லக்னம், 7-ல் சுக்கிரன் இருக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 தோற்றப் பொலிவு கொண்டவர்கள்.

🌟 சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 பொருள் சேர்க்கும் திறமை உடையவர்கள்.

🌟 எதிர்பாராத அதிர்ஷ்டம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 2-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 வசதி வாய்ப்பு மற்றும் நல்ல கண்பார்வை இருக்கும்.

🌟 அனைவரையும் கவரும் தோற்றப் பொலிவு கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. பிறப்பின் போது நட்சத்திரத்திற்கும், இறப்பின் போது திதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன்?

🌟 பிறப்பின் போது நாம் பெற்ற உடல் மூலமே நாம் பெறும் சுக, துக்கங்கள் அமைகின்றன. இதற்கு மனோகாரகன் மற்றும் உடல்காரகனான சந்திரனே காரணம் ஆவார்.

🌟 உடலிலிருந்து ஆன்மாவானது பிரிந்த பிறகு உடலிற்கு எவ்வித சக்தியும் இருப்பதில்லை. எனவே, ஒருவர் இறந்த திதியில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் ஆன்மாவிற்கு சக்தி அளிக்கப்படுகிறது.

பிறப்பு :

🌟 பிறப்பின் போது மனோகாரகன் மற்றும் உடல் காரகனான சந்திரனே நட்சத்திரமாகவும், ராசியாகவும் வருவதால் நட்சத்திரத்திற்கும், ராசிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இறப்பு :

🌟 ஒருவர் இறப்பின் பின்பு, திதியின் மூலம் ஆன்மாவிற்கு சக்தியை அளிப்பதால் இறப்பிற்கு பின் திதி முக்கியத்துவம் பெறுகிறது.

🌟 இதனை பொறுத்தே பிறப்பின் போது நட்சத்திரத்திற்கும், இறப்பின்போது திதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.



Share this valuable content with your friends