No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாங்கல்ய கயிறு மஞ்சள் வண்ணம் கொண்டதாக தான் இருக்க வேண்டுமா? அதற்கு காரணம் என்ன?

Nov 22, 2018   Ananthi   572    ஜோதிடர் பதில்கள் 

1. மாங்கல்ய கயிறு மஞ்சள் வண்ணம் கொண்டதாக தான் இருக்க வேண்டுமா? அதற்கு காரணம் என்ன?

🌟 மாங்கல்ய கயிறு மஞ்சள் வண்ணம் கொண்டதாக தான் இருக்க வேண்டும்.

🌟 ஏனெனில், மஞ்சள் வண்ணம் சுபிட்சத்தை குறிக்கக்கூடியது.

🌟 மஞ்சள் எல்லோரின் வீட்டில் இருப்பதால் தாலி சரடு மாற்றுவது எளிதான ஒன்றாகும் என்று கருதியே நம் முன்னோர்கள் மாங்கல்ய கயிறு மஞ்சள் வண்ணம் கொண்டதாக தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

2. குழந்தைக்கு உணவு ஊட்ட நல்ல ஓரை எது?

🌟 குழந்தைக்கு உணவு ஊட்ட சந்திர ஓரையை பயன்படுத்திக்கொள்ளவும்.

3. பெண் பூரட்டாதி 4-ம் பாதம், ஆண் சுவாதி 1-ம் பாதம். இருவருக்கும் பொருத்தம் வருமா?

🌟 பெண் பூரட்டாதி 4-ம் பாதம், ஆண் சுவாதி 1-ம் பாதம் இருந்தால் பொருத்தம் வரும்.

🌟 பாவக ரீதியான பொருத்தங்களை ஆய்வு செய்து திருமணம் செய்து கொள்ளவும்.

4. புதுமண தம்பதிகள் மூன்றாவது மாதம் தாலி பிரித்து கட்டும் சடங்கின் பொருள் என்ன?

🌟 திருமணத்தின் போது கட்டப்படும் தாலியை (பல நூல்கள் இணைத்து) மணப்பெண்ணின் நடைமுறைக்கு (ஒரே கயிறு அல்லது தாலி சங்கிலி) தகுந்தாற்போல் மாற்றி கட்டுவது அந்த சடங்கின் பொருள் ஆகும்.

5. ஒரு மனையில் 2 போர் போடலாமா? ஒரு போர் வடகிழக்கு மூலையில் உள்ளது. இரண்டாவது போர் தென்மேற்கு மூலையில் போடலாமா?

🌟 ஒரு மனையில் அவரவர் வசதிக்கு ஏற்ப போர் போட்டு கொள்ளலாம்.

🌟 வடகிழக்கு மூலையில் போர் போடலாம்.

🌟 தென்மேற்கு மூலையில் போர் போடுவதை தவிர்க்கவும்.

6. கன்னி மூலையில் பிள்ளையார் வைத்து வழிபடலாமா?

🌟 கன்னி மூலையில் பிள்ளையார் வைத்து வழிபடலாம்.


Share this valuable content with your friends