No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்கிறார்கள். இது உண்மையா?

Nov 21, 2018   Ananthi   510    ஜோதிடர் பதில்கள் 

1. நாங்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்கினோம். அந்த வீட்டில் குடி இருந்தவர் இறந்துவிட்டார். அடுத்த மாதம் குடிப்போக வேண்டும். இதற்கு என்ன செய்வது?

🌟 வீட்டில் கணபதி பூஜை செய்த பின் குடிப்போகவும்.

2. ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்கிறார்கள். இது உண்மையா?

🌟 ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்பது உண்மை அன்று.

🌟 அவரவர் ஜாதகமே அவருக்கு அவர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்கின்றது.

3. அஷ்டம சனி நடைபெறும் இரு நபர்கள் ஒரே வீட்டில் வசிக்கலாமா? பாதிப்புகளில் இருந்து விலக என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 அஷ்டம சனி நடைபெறும் இரு நபர்கள் ஒரே வீட்டில் வசிப்பதைக் காட்டிலும் தனித்து இருப்பது நன்று.

🌟 அஷ்டம சனி பாதிப்புகளில் இருந்து விலக தினமும் விநாயகரையும், சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வரவும்.

4. கன்னி மூலையில் கிணறு இருக்கலாமா?

🌟 கன்னி மூலையில் கிணறு இருத்தல் நல்லதல்ல.


Share this valuable content with your friends