No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கிரிவலம்!

Nov 21, 2018   Ananthi   519    ஆன்மிகம் 

🌟 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில், வரலாற்று சிறப்பும், இதிகாசம் மற்றும் புராண சிறப்பும் கொண்ட தலமாகும். அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

🌟 திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போன்று திருச்செங்கோடு பௌர்ணமி கிரிவலத்திலும் ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். சித்ரா பௌர்ணமி முதலிய விஷேச காலங்களில் பக்தர்கள் இரவு 12 மணிவரை கிரிவலம் வந்து இறையருள் பெறுகின்றனர்.

🌟 மலையேறுவதற்காக படிவழி தொடங்குமிடமே மலையடிவாரம். கிரிவலம் தொடங்கும் பக்தர்கள் முதலில் அவ்வடிவாரம் சென்று அங்குள்ள கஜமுக பிள்ளையாரை வணங்கி சுமார் 7 கி.மீ உள்ள கிரிவல பாதையை சுற்றி வந்து அதே இடத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வார்கள்.

🌟 கிரிவலம் செல்லும் பக்தர்கள், ஆறுமுக சுவாமி கோவிலில் துவங்கி, பெரிய ஓங்காளியம்மன் கோவில், நாமக்கல் சாலை, மலைசுத்தி சாலை, வாலரைகேட், பரமத்தி வேலூர் சாலை, சின்ன ஓங்காளியம்மன் கோவில், தெற்கு ரதவீதி வழியாக மீண்டும் ஆறுமுக சுவாமி கோவிலை வந்தடைவர்.

🌟 நாமக்கல், ஈரோடு, சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் செல்வார்கள்.

🌟 மனத்தூய்மையுடன் இறைவனை மனதில் நினைத்து நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்த வண்ணம் வரவேண்டும். காலணிகளை தவிர்த்தல் வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்லக்கூடாது.

🌟 திருச்செங்கோடு மலை ஓங்கார வடிவானது. ஓங்காரம் என்பது சிவ வடிவமானது. பெரும் பலன் அத்தனையும் இந்த மலையை வலம் வருதலால் கிட்டும்.

🌟 பௌர்ணமி நாளிலும், அமாவாசை நாளிலும் சிவராத்திரியிலும் பிறந்த (ஜன்ம) நட்சத்திரத்திலும் திருச்செங்கோடு மலையை கிரிவலமாக வருவது அளவற்ற நற்பலனை தரும்.

🌟 கிரிவலம் முடிந்ததும் குளிப்பதை தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.

பௌர்ணமி கிரிவலம் :

🌟 இந்த மாத பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பௌர்ணமியில் கிரிவலத்தை மேற்கொள்வது எண்ணிலடங்கா பலன்களை தரக்கூடியது.

கிரிவலத்திற்கு உகந்த நேரம் :

🌟 மாலை நேரத்தில் குறைந்த வெயிலில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு கிரிவலத்தை மேற்கொண்டால் உடல் நலமும், ஆரோக்கியமும் மேம்படும்.

🌟 ஆகவே, இந்த பௌர்ணமியில் குடும்பத்துடன் கிரிவலம் சென்று கடவுளின் அருளைப் பெற்றிடுங்கள்.


Share this valuable content with your friends