No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்து சாஸ்திரம் தலைவாசலின் முக்கியத்துவம்!!

Nov 15, 2018   Ananthi   513    வாஸ்து 

வடக்கு வாசல் :

நம்முடைய வீட்டிற்கு வடக்கு வாசல் என்பது வடக்கு பகுதியில் கிழக்கு சார்ந்து வருவதே சிறப்பு. இந்த பகுதியில் வரும்போது பலபல எண்ணிலடங்கா நன்மைகள் ஏற்படும். அந்த வீடு நல்ல சுபிக்ஷமான நிலையிலே இருக்கும்.

நடுப்பகுதியில் தலைவாசல் வைக்கும்போது அதற்குரிய மதிப்பை இழந்து விடுகிறது. மேற்கு சார்ந்த தலைவாசல் வரும் பட்சத்தில் அதனுடைய கெட்டபலன்கள் யாவும் அதே வீட்டில் வசிக்கும் ஆண்கள் மீதே இருக்கும்.

1. நிலையான வருமானம் இருக்காது.

2. குடும்ப சொந்தங்கள் விட்டு விலகும் நிலை ஏற்படும்.

3. உறவுகளில் பாதிப்பு ஏற்படும்.

4. மனநிலையில் பாதிப்பு ஏற்படும்.

5. கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படக்கூடும்

கிழக்குவாசல் :

நம்முடைய வீட்டிற்கு கிழக்கு வாசல் என்பது கிழக்கு பகுதியில் வடக்கு சார்ந்து வருவதே சிறப்பு. இதனால் பலபல நன்மைகள் இயற்கையிலேயே அந்த வீட்டிற்கு ஏற்படும்.

நடுப்பகுதி தலைவாசல் என்பது மதிப்பில்லாத தலைவாசலாக அமைகிறது. தெற்கு சார்ந்து வருவது தவறு. இதனால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் மீது கெடுதலான பலன்கள் ஏற்படும்.

1. ஆரோக்கிய குறைவு உண்டாகும்.

2. கண்பார்வை பாதிப்பு ஏற்படும்.

3. ஆண்களின் ஆதிக்கம் பாதிக்கப்படும்.

4. மனநிலை பாதிப்பைக் கூட உருவாக்கக் கூடியது.

5. திருமணத்தடை, குழந்தைப்பேறு தள்ளிப் போகுதல்.

தெற்கு வாசல் :

நம்முடைய வீட்டிற்கு தெற்குவாசல் என்பது கிழக்கு சார்ந்து மட்டுமே வரவேண்டும். தெற்கு வாசல் வைக்கும்போது அதே நேர் வடக்கு பகுதியிலும் வாசல் வைப்பதே மிக மிக சிறப்பைத் தரும்.

தெற்கு நடுப்பகுதி வாசல் மதிப்பில்லாத வாசலாக அமைகிறது. மேற்கு சார்ந்த தலைவாசல் வருவது மிகப்பெரிய தவறு. இதனால் பல பல கெடுதலான பலன்கள் அந்த வீட்டு ஆண், பெண் இருபாலருக்குமே இருக்கும்.

1. கணவன் மனைவி பிரிந்து வாழ நேரிடும்.

2. திருமணம் தாமதப்படும்.

3. குழந்தை பிறப்பு தள்ளி போகுதல்.

4. விவாகரத்து, கடன் சுமை.

மேற்கு வாசல் :

நம்முடைய வீட்டிற்கு மேற்கு வாசல் என்பது வடக்கு சார்ந்து வருவதே சிறப்பை தரும். இங்கு மேற்கு வாசல் வரும்போது கிழக்கு வாசல் வர வேண்டும். கிழக்கு வாசல் வைக்கும்போது என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அதே பலன்கள் இங்கும் கிடைக்கும்.

மேற்கு நடுப்பகுதி தலைவாசல் வரும்போது அதன் தன்மையை இழந்துவிடுகிறது. தெற்கு சார்ந்து வரக்கூடிய தலைவாசல் அமைப்பு தவறு. அதனுடைய கெட்ட பலன்கள் வீட்டில் உள்ள ஆண் பெண் இருவர் மீதும் இருக்கும்.

1. கலப்பு திருமணம் அல்லது காதல் திருமணம்.

2. வியாபார நஷ்டம்.

3. அடிக்கடி விபத்து ஏற்படுதல்.

4. தற்கொலை முயற்சி.

5. வேலையில் அடிக்கடி இடமாற்றம்.


Share this valuable content with your friends


Tags

april 12 today horoscope 21.04.2020 in pdf format காலாட்படை தினம் today horoscope 27.03.2020 in pdf fomat உலக கருணை தினம் கருட புராணத்தை வீட்டில் படிக்கலாமா? கோலாட்டம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? FLOWER vinaayagar தீபாராதனை காட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கருட பகவான் 2020 ஆங்கில வருட ராசிபலன்கள்PDF பால் திரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எங்கள் வீட்டில் வாழைமரத்தில் பூவுடன் தார் தொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பள்ளத்தில் தண்ணீர் நிரம்பியது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராசி அதிபதி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? dailly horoscope 18.03.2020 in pdf format சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் Margali_Month_rasipalan