No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மக்களே உஷார்... நெருங்கி வரும் கஜா புயல் : பாதுகாப்பு குறிப்புகள் !!

Nov 15, 2018   Ananthi   380    ஆன்மிகம் 

🌟 மக்கள் புயலை கண்டு அஞ்ச வேண்டாம். பதற்றப்பட வேண்டாம். கஜா புயல் தீவிர புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பாதுகாப்பிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

🌟 கஜா புயல் பாம்பன் மற்றும் கடலூருக்கும் இடையே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

🌟 காலை 9.30 நிலவரப்படி கஜா புயல் நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

🌟 இன்று அதிகாலை மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னைக்குட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. காலை சுமார் 9 மணியில் இருந்து சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

🌟 மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நாகையை நோக்கி நகர்கிறது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

🌟 வானொலி, தொலைக்காட்சி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலி மற்றும் சமூகவலைதள பக்கங்களை பின்பற்றவும்.

🌟 முதலில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டுப்பத்திரங்கள் போன்ற முக்கியமான ஆவணங்களை நீர் புகாத பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கவும்.

🌟 வீட்டிற்குள் இருக்கும் மக்கள் அமைதியாக இருப்பதுடன், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும். ஏழு நாட்களுக்கு உண்டான உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

🌟 பேட்டரி, டார்ச் லைட், தீப்பெட்டி, கத்தி, கயிறு, குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டியை தயாராக வைத்திருக்கவும்.

🌟 மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்த வேண்டாம். புயல் கரையை கடந்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம்.

🌟 வெளியில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான கட்டிடத்திலோ அல்லது அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திலோ தங்கவும்.

🌟 ஈரமாக இருப்பின் மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம்.

🌟 கேஸ் கசிவு ஏற்படாதபடி சிலிண்டரை ஆப் செய்து வைக்கவும்.

🌟 மழைவரும் சமயங்களில் வீட்டின் மேல் தளத்தில் (மொட்டை மாடி) நின்று வேடிக்கை பார்க்கக்கூடாது.

🌟 வீடுகளிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும். மழை நின்ற பின்பு வெள்ளம் வடிந்த பின்பு அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்லவும்.

புயல் எச்சரிக்கை கூண்டு எண்ணின் விளக்கம் :

1 - காற்றழுத்த தாழ்வு பகுதி

2 - புயல் உருவாகியுள்ளது

3 - திடீர் காற்று மழை

4 - புயல் துறைமுகம் வழியே கடக்கும்

5 - இடது பக்கமாக கரையைக் கடக்கும்

6 - வலது பக்கமாக கரையைக் கடக்கும்

7 - கடுமையாகப் பாதிக்கப்படும்

8 - இடது பக்கம் மோசமான வானிலை நிலவும்

9 - வலது பக்கம் மோசமான வானிலை நிலவும்

10 - பெரும் பாதிப்பும், அழிவும் ஏற்படும்

11 - பேரழிவும் மோசமான வானிலை உச்சபட்ச எச்சரிக்கை

Tagged  kajaa storm

Share this valuable content with your friends


Tags

மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? வீட்டின் பூஜை அறையில் நான் சாமி கும்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kaliya nayanar தைப்பூசம் 5ல் சூரியன் கணன் ருத்ராட்சம் அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இரவீந்திரநாத் தாகூர் அடுப்பு வெடிப்பது போல் கனவு கண்டால் பலன் என்ன? பாம்பு house warming பெண் சந்ததி புதிய இயந்திரத்தில் வேலையை தொடங்குவதற்கு நல்ல நேரம் பார்க்க வேண்டுமா? jothidier pathilgal மஞ்சள் சேலையை கனவில் கண்டால் என்ன பலன்? உசைன் போல்ட் சந்திரன் இருந்தால் என்ன பலன்? பல கொடிகள் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஸ்ரீரங்கநாதரை கனவில் கண்டால் என்ன பலன்? girl baby born in dream