No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7-ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

Nov 14, 2018   Ananthi   499    ஜோதிடர் பதில்கள் 

1. சித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன பலன்?

🌟 அழகிய தோற்றம் கொண்டவர்கள்.

🌟 அன்போடு பழகும் தன்மை உடையவர்கள்.

🌟 பேச்சுவன்மை உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு வழிகாட்டும் திறமை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் கும்ப லக்னம். 3-ம் இடத்தில் சனி உள்ளது. இதற்கு என்ன பலன்?

🌟 வெளியூர் தொழில் வாய்ப்புகள் சாதகமாகும்.

🌟 சகோதரர்களிடம் மனக்கசப்புகள் உண்டாகும்.

🌟 எதிலும் நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் சிம்ம ராசி, ரிஷப லக்னம். லக்னத்தில் ராகுவும், சனியும் இணைந்துள்ளன. இதற்கு என்ன பலன்?

🌟 சோம்பல் குணம் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர்கள்.

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கும்ப ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அமைதியான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 எவருக்கும் பயம் கொள்ளாதவர்கள்.

🌟 முரட்டு பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தும் திறன் படைத்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரத்திற்கான பொது பலன் என்ன?

🌟 உண்மையை பேசக்கூடியவர்கள்.

🌟 தானம் செய்வதில் சிறந்தவர்கள்.

🌟 வாதம் செய்வதில் வல்லவர்கள்.

🌟 கல்வி வேள்வியில் ஞானம் உள்ளவர்கள்.

6. 7-ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அறுசுவை உணவுப் பிரியர்கள்.

🌟 நல்ல குணம் கொண்ட துணையை அமையப் பெறுவார்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. மேஷ ராசி, கும்ப லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.

🌟 எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 பிடிக்காதவர்களை பற்றி கவலைக்கொள்ளாதவர்கள்.

🌟 வாக்குவன்மை கொண்டவர்கள்.

🌟 தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends