No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முருகப்பெருமான் தோன்றிய வரலாறு !!

Nov 09, 2018   Ananthi   504    ஆன்மிகம் 

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம், தங்களை சூரபத்மனிடம் இருந்து காக்கும்படி முறையிட்டனர். சிவபெருமானும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதிதேவியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க, அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தார்.

🌟 அந்த தீப்பொறிகள் ஆறும், ஆறு குழந்தைகளாகத் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதிதேவி கட்டி அணைக்க, அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும், இரு கரங்களும் கொண்ட முருகப்பெருமானாகத் தோன்றினார். இத்திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப்பெருமானுக்கு ஏற்பட்டது.

🌟 தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்த முருகப்பெருமான், திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு, இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை என்று கூறினார்

🌟 அசுரர்களை அழிக்க எண்ணிய முருகன், ஐந்து நாட்களில் சிங்கன், தாரகன், தாரகன் மகன் என எல்லா சேனைகளையும் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவனே சூரபத்மன். முருகப்பெருமான் தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரிக்கை விடுத்தார். ஆனால் சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது என்று கூறினான்.

🌟 இதையறிந்த பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப்பெருமானை சூரபத்மனுடன் போர் புரிய அனுப்பி வைத்தனர். சூரபத்மனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான்.

🌟 அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகப்பெருமானுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரபத்மன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். முருகப்பெருமான் அவன் கூறியதற்கு அசராமல் நின்றார். அதைக்கண்ட, சூரபத்மனோ தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். ஆனால், முருகப்பெருமான் அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார்.

🌟 உடனே, சூரபத்மன் மகாசமுத்திரமாக உருமாறி, மிகப்பெரிய அலைகளுடன் முருகப்பெருமானைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகப்பெருமான். கடல் பயந்து பின் வாங்கியது. பின்னர், சூரபத்மனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான். ஆனால், முருகப்பெருமானோ தன் தாய் உமாதேவியிடம் ஆசிப்பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார்.

🌟 இதனால், தன்னுடைய ஆணவம் நீங்கிய சூரபத்மன், முருகப்பெருமானிடம் தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடினான். அவன்மேல் இரக்கம் கொண்ட முருகப்பெருமான், பிளவுபட்ட மாமரத்தின் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி, தனது வாகனமாக மயிலையும், கொடிச்சின்னமாக சேவலையும் மாற்றினார்.

🌟 சூரபத்மன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும் பரமகாருண்ய மூர்த்தியான அவர், சூரபத்மனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால் வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார் முருகப்பெருமான். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகப்பெருமான் சிவபூஜை செய்ய விரும்பினார். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச்செந்தூர் கோவில்.


Share this valuable content with your friends


Tags

குருதயாள் சிங் லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்? கும்பாபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருச்சிக ராசி. ஏழரை சனி முடிந்துவிட்டதா? jothidam யானைகள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? todayrasipalan 18.04.2020 Kaṉṉi rasi palan 2023.! இந்திய அரசியல் சாசன தினம் histroy of today குங்குலியக் கலய நாயனார் argument ராகு 2ல் இருந்தால் 23.05.2019 Rasipalan in pdf format!! உங்களின் குடும்ப வாழ்க்கையை தீர்மானிக்கும் சுக்கிரன் !! வீட்டை நமது வசதிக்காக மாற்றி அமைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!! 04.05.2020 in pdf format தாய் இறந்தால் எத்தனை மாதம் கழித்து சுபச் செயல்கள் செய்ய வேண்டும்? கட்டிட அமைப்பின் தீமைகள்...! தினசரி ராசிபலன்கள் (21.04.2020)