No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமண தம்பதியினரின் புகைப்படத்தை வீட்டில் எத்திசையை பார்த்து வைக்க வேண்டும்?

Nov 07, 2018   Ananthi   513    ஜோதிடர் பதில்கள் 

1. திருமண தம்பதியினரின் புகைப்படத்தை வீட்டில் எத்திசையை பார்த்து வைக்க வேண்டும்?

🌟 திருமண தம்பதியினரின் புகைப்படத்தை வீட்டில் தெற்கு திசையை தவிர்த்து மற்ற திசைகளை பார்த்தவாறு வைக்கலாம்.

2. மாதவிடாய் நாட்களில் பெண்கள் ஏன் கோவிலுக்குச் செல்லக்கூடாது?

🌟 பெண்களின் உடலமைப்பு ஆண்களின் உடலமைப்பைக் காட்டிலும் சற்று வேறுபாடு கொண்டது.

🌟 மாதவிடாய் நாட்களில் பெண்கள் அடையும் உடல் அசௌகரியங்களை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் மாதவிடாய் நாட்களில் பெண்கள் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார்கள்.

3. கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம் உடையவர்கள் எந்த திசையை பார்த்து வீடு கட்ட வேண்டும்?

🌟 கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம் உடையவர்கள் தெற்கு திசையை பார்த்து வீடு கட்ட வேண்டும்.

🌟 ராசியை கொண்டு அமைப்பதை காட்டிலும், லக்னத்தை கொண்டு வீட்டின் திசையை அமைப்பது நன்மையை அளிக்கும்.

4. லக்னத்திலிருந்து 7-ல் சுக்கிரனும், சனியும் இருந்தால் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுமா?

🌟 லக்னத்திலிருந்து 7-ல் சுக்கிரனும், சனியும் இருந்தால் திருமண வாழ்க்கை அமைவதில் சற்று காலதாமதம் உண்டாகும்.

🌟 திசா புத்திக்கு ஏற்ப சுப பலன்கள் உண்டாகும்.

5. ஒரு வீட்டில் அண்ணன், தம்பி இருவருக்கும் ஒரே லக்னம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

🌟 ஒரு வீட்டில் அண்ணன், தம்பி இருவருக்கும் ஒரே லக்னம் இருந்தால் நேரம் கிடைக்கும்போது குலதெய்வ வழிபாடு செய்வது நன்மையை அளிக்கும்.



Share this valuable content with your friends