No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?

Nov 03, 2018   Ananthi   452    ஆன்மிகம் 

👉 தீப ஒளி திருநாள் வாழ்வில் இனிமை பொங்கச் செய்யும் ஓர் இனிய நாளாகும். தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா.

👉 இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் மனதில் இருக்கும் இருள் அகல்வதற்கு பாதை போடுகிறது இந்த தீபாவளி திருநாள்.

👉 பொதுவான நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரச் செய்யும் குளியல் ஆகும்.

👉 எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தாலும் குளிக்கா விட்டாலும் தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் உண்டு.

👉 தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.

👉 தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம்.

👉 ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். தீபாவளியில் எண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமியினை வீட்டிற்கு அழைத்தால் வளம் மென்மேலும் வளரும்.


Share this valuable content with your friends