No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குடியிருக்கும் வீட்டில் புறா கூடு கட்டுவது நல்லதா? கெட்டதா?

Nov 01, 2018   Ananthi   1322    ஜோதிடர் பதில்கள் 

1. குடியிருக்கும் வீட்டில் புறா கூடு கட்டுவது நல்லதா? கெட்டதா?

🌟 குடியிருக்கும் வீட்டில் புறா கூடு கட்டுவது வீடு சுத்தமில்லாத நிலையை குறிக்கிறது. 🌟 எனவே, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

2. நான் ரிஷப ராசி, சிம்ம லக்னம். லக்னத்தில் ராகு இருக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 தன் விருப்பப்படி வாழக்கூடியவர்கள்.

🌟 நிர்வாகத் திறமை கொண்டவர்கள்.

🌟 மறைமுக செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. திருமண நாளில் மணப்பெண்ணுக்கு சந்திராஷ்டமம் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 திருமண நாளில் மணப்பெண்ணுக்கு சந்திராஷ்டமம் இருந்தால், அந்நாளை தவிர்த்து மற்ற சுப தினங்களில் திருமணம் செய்யலாம்.

🌟 முடியாத பட்சத்தில் குலதெய்வத்தை வழிபட்டு பின்பு பெரியோர்களின் ஆசீர்வாதங்களுடன் திருமணம் செய்து கொள்ளலாம்.

4. தலைக்கு குளித்தால் மட்டும் தான் தீபம் ஏற்ற வேண்டுமா?

🌟 தீட்டு நாட்களாக இருக்கும் பட்சத்தில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளித்த பின் வீட்டில் தீபம் ஏற்றலாம்.

🌟 மற்ற நாட்களில் உடலுக்கு தண்ணீர் ஊற்றி குளித்த பின் வீட்டில் தீபம் ஏற்றலாம்.

5. கடகத்தில் சந்திரனுடன் ராகு சேர்ந்திருந்தால் பலன்?

🌟 தாயின் உடல் நலத்தில் அவ்வப்போது உடல்நலக் கோளாறுகள் உண்டாகும்.

🌟 நிலையில்லா மனநிலையை உடையவர்கள்.

🌟 நன்கு சிந்திக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends