No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துவும் வரவேற்பறையும் !!

Oct 27, 2018   Ananthi   492    வாஸ்து 

வரவேற்பறை :

நமது வீட்டில் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று. வரவேற்பறையை வைத்தே அந்த வீட்டில் உள்ளவர்களின் குணாதிசயங்களை கூற முடியும். நமது வீட்டில் எங்கு வரவேற்பரை வர வேண்டும். அதன் நன்மை தீமைகளைப் பற்றி அறிவோம்.

வடகிழக்கு :

வரவேற்பறைக்கு முதல் முக்கியத்துவம் என்றால் அது வடகிழக்கு. வரவேற்பறையை பொருத்தவரை நீளம், அகலம், மாஸ்ட்டர் பெட் ரூம்மை விட பெரியதாக இருக்க வேண்டும். வடகிழக்கு பகுதியில் வரவேற்பறை வருவதால் மிக பல பல நல்ல விஷயங்களுக்கு வாய்ப்புண்டு.

தென்கிழக்கு :

வரவேற்பறைக்கு இரண்டாவது முக்கியத்துவம் என்றால் அது தென் கிழக்கு ஆகும். இந்த பகுதியில் வரவேற்பறை வரும் பட்சத்தில், சமையலறை இடம் மாறும். அதனால் சமையலறையை கவனத்தில் எடுத்துக் கொண்டு இப்பகுதியில் வரவேற்பறையை அமைத்துக் கொள்வது சிறப்பு. இந்த பகுதியில் வரவேற்பறை வருவது நன்மையே ஆகும்.

வடமேற்கு :

நமது வீட்டில் வரவேற்பறைக்கு இரண்டாவது முக்கியத்துவம் தென்கிழக்கு பகுதி என்றால், அதேபோல்தான் வடமேற்கு பகுதிக்கும் பொருந்தும். வடமேற்கு பகுதியில் வரவேற்பறை வரும்பட்சத்தில் தலைவாசல் அமைப்பும், காம்பவுண்ட் அமைப்பையும், டாய்லெட் அமைப்பையும் கவனத்தில் கொண்டு இந்த பகுதியில் வரவேற்பறை அமைக்கவும். இப்பகுதியில் வரவேற்பறை உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் எப்பொழுதுமே வெளி உலகு தொடர்புகள் அதிகமாக இருக்கும்.

தென்மேற்கு பகுதி :

தென்மேற்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் வரவேற்பறை வரக்கூடாது. மற்ற மூன்று பகுதிகளில் அமைக்கும்போது எவ்வளவு நன்மைகள் கிடைக்குமோ அதே அளவுக்கு தீமைகளை உண்டு பண்ணக்கூடிய இந்த பகுதி வரவேற்பறை. ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும். அதிலும் தொழிலில் கொடுக்கல்-வாங்கல், குடும்ப உறவு, கணவன்-மனைவி உறவு, ஆரோக்கியம், வேலை இல்லாத நிலை, தற்கொலை எண்ணம், கடன் சுமை, திருமண வயதை அடைந்து திருமண தடை, உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.


Share this valuable content with your friends


Tags

fox raasi kal திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கிரிவலம்! ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் முதல் பெண்ணும் திருமணம் செய்யலாமா? வேலையை இழப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்திர சபை அண்ணனிடம் புதிய உடையை பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முக்கிய கண்டுபிடிப்புகள் அம்மன் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? ayilyam vashuthu துலாம் லக்னத்தில் செவ்வாய் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்? பாகிஸ்தான் சுதந்திர தினம் 24.02.2019 Rsipalan in pdf format !! பிடித்த உணவுகளை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனிமகாப்பிரதோஷம் சாமியார்கள் வீட்டினுள் வந்து ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? அனுமனை கனவில் கண்டால் என்ன பலன்? மலையேறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?