No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவமி திதியில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது ஏன்?

Apr 28, 2023   Ramya   185    ஆன்மிகம் 


நவமி பற்றிய சிறப்புத் தகவல்கள்!!


🌟 நவமி ஆனது சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஆகும்.

🌟 அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகாவிஷ்ணுவிடம் சென்று தங்களின் கவலையை கூறினார்கள்.

🌟 அப்போது விஷ்ணு பகவான், உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும் என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.


🌟 நவமி திதியில் தசரதர்-கோசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

🌟 அமாவாசை நாளுக்கு அடுத்து வரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். நவமி திதியில் தான் ஸ்ரீராமர் அவதரித்தார். அவர் அரியணை ஏற்கும் நேரத்தில் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

🌟 அதுமட்டும் இல்லாது சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்தது தான் காரணம். எனவே, நவமி திதியில் நல்ல காரியங்கள் தொடங்கப்படுவதில்லை. ஆனால், தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும்.

🌟 பொதுவாக அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

🌟 ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால் நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

🌟 நவமியில் தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்யலாம்.

🌟 இந்த நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் நமக்கு வெற்றி நிச்சயம். மேலும், இந்த திதி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கினால் வேலையில் அனைத்து காரியமும் சுபமாக நடைபெறும்.


நவமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் :

🌟 நவமி திதியில் பிறந்தவர்கள் கீர்த்தி கொண்டவர்களாக இருப்பார்கள். எதிர்பாலின நபர்களின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். புகழ் பெறுவதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எதிர்ப்பை கண்டு அஞ்சாதவராக இருப்பார்கள். கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள். விருப்பம் போல வாழக்கூடியவர்கள். இது பொதுவான பலன்கள்.

நவமி திதியில் என்ன செய்யக்கூடாது :

🌟 நவமி திதியில் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். உதாரணமாக அடுத்தவரை தாக்குவது, பழி வாங்குவது, பதிலடி கொடுப்பது போன்ற எண்ணங்கள் ஏற்படலாம்.

🌟 எனவே அன்றைய தினங்களில் இறை வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.


Share this valuable content with your friends


Tags

thirupavai father daily horoscope 11.04.2020 in pdf format புதுவிதமான சிந்தனை... நீண்ட ஆயுள்... யார் யாருக்கு? கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிக்க வேண்டிய முறை..!! நீல் ஆம்ஸ்ட்ராங் வார ராசிபலன்கள் (29.07.2019 - 04.08.2019) PDF வடிவில் !! ஜனவரி மாத ராசிபலன் வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் பீரோ எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்? கந்துக்கடன் குழந்தையை வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 9ல் கேது இருந்தால் என்ன பலன்? ஆகம விதிப்படி திருத்தலம் அமைதல் மகர ராசி பலன்கள்.! வீட்டில் கடுகு சிதறுவது நல்லதா? கெட்டதா? உயரமான மரங்களை வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்? கீரை வகைகளை கனவில் கண்டால் என்ன பலன்? Tuesday rasipalan - 21.08.2018