No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கஷ்டங்களை தீர்க்கும் அஷ்டமி விரத வழிபாடு..!!

Apr 28, 2023   Ramya   165    ஆன்மிகம் 


அஷ்டமி விரதம்...!!


💎 மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்புதான். அப்படி நமக்கு ஒரு கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போகவேண்டாம், துவண்டுவிடவும் வேண்டாம். சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு ஆபத்துகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.

💎 ஒவ்வொரு மாதமும் வரும் அஷ்டமியில் விரதமிருந்து பரமேஸ்வரனை பூஜிப்பதே அஷ்டமி விரதமாகும்.

💎 அஷ்டமி என்பது எட்டாவது திதி. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இந்த விரதம் தொடங்குபவர்கள் மாதத்தில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.

💎 அஷ்டமி வழிபாடு ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது.

💎 அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம். அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும்.

💎 சகல சௌபாக்கியங்களும் தரும் விரதம் என்று சூத முனிவர் நைமிசாரண்யத்திலுள்ள முனிவர்களுக்கு கூறிய விரதம் அஷ்டமி விரதமாகும். ஆரோக்கியமாக உடல் குறைபாடின்றி இருக்க விரும்புபவர்கள் எல்லா அஷ்டமி தினங்களிலும் விரதம் இருந்து பலன் பெறலாம்.

💎 சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். 12 ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர். காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

💎 எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிவப்பு நிற ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். தினமும் ஸ்ரீ கால பைரவர் வழிபாடு மற்றும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு மேற்கொள்ளுவது சிறப்பு.


Share this valuable content with your friends


Tags

உயிருக்கு போராடுபவர்களுக்கு மருத்துவர் உடையில் உதவி செய்வதாக கனவு கண்டால் என்ன பலன்? magaram cloth jothi மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தேன்கூடு இருக்கலாமா? மாலுமிகள் தினம் 12ல் சுக்கிரன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (03.12.2021) pdf வடிவில்!! வடக்கு முழுவதும் மூடிய அமைப்பு may 10 Today Horoscope - 13.07.2018 நீசம் என்றால் என்ன? jothider kelvi pathilgal Horoscope for Saturday ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்கிறார்கள். இது உண்மையா? ruthratcham பூஜையறை கடனை ஏற்படுத்துமா? vaigundam ஆஞ்சநேயர் கனவில் வந்து செய்வினை கோளாறு இருப்பதாக கூறினால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?