No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுக்கக்கூடாது ஏன்?

Apr 25, 2023   Ramya   180    ஆன்மிகம் 


செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுக்கக்கூடாது ஏன்?

🌟 உலகில் மனிதராய் பிறந்த அனைவரும் உதவி செய்யவே விரும்புகிறார்கள். இருந்தும் சிலர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்க மறுக்கிறார்கள்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுக்கக்கூடாது ஏன்?

🌟 செவ்வாய்க்கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

🌟 நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறார்கள்.

🌟 இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

🌟 இல்லையெனில், நம்மிடம் இருக்கும் அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்றுவிடும் என்பது ஒரு ஐதீகமாகும்.

🌟 மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, இந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.

செய்ய வேண்டியவை :

🌟 செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.

🌟 அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை உள்ள காலப்பகுதிக்கு "பிரம்ம முகூர்த்தம்" என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.

🌟 செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

🌟 சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், கோ ஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

லட்சுமி நம்மைவிட்டு போகாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை :

🌟 ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக்கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

🌟 குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

🌟 வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் இவைகளில் உட்காரக்கூடாது.

🌟 இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக்கூடாது.

🌟 விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறருக்கு கொடுக்கக்கூடாது.

🌟 ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.


Share this valuable content with your friends


Tags

ஏழரை சனி.! நண்பர்களுடன் சேர்ந்து உணவு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கொண்டாடும் முறை புளிய மரத்தின் கிளை உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருப்பதி கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? LEG கேதுபகவான் இங்கு இருந்தால்... வெளிநாட்டு யோகத்தை வழங்குவார்..!! வேகவைத்த முட்டையை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜூலை 13 விநாயகர் மற்றும் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மேஷ ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! மாலை அணிந்தவர் நகங்களை வெட்டலாமா? கிருஷ்ண ஜெயந்தி அன்று என்ன செய்ய வேண்டும்? இனிப்பு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்? வாலண்டினா டெரெஷ்கோவா ஜுலை 26 கோவிலில் மொட்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நட்சத்திரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? தொலைந்த பொருள் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?