No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மூதாதையர் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

Oct 25, 2018   Ananthi   944    ஜோதிடர் பதில்கள் 

1. நான் திருவாதிரை நட்சத்திரம். நான் விரும்பும் நபருக்கு திருவோணம் நட்சத்திரம். எங்களுக்கு ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்று கூறுகிறார்கள். ஆனால், அவருக்கு ஆரோகணம், நான் அவரோகணம். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.

2. விளக்கு பூஜையில் முடி தீப்பிடித்தால் என்ன காரணம்? பரிகாரம் ஏதேனும் உண்டா?

🌟 விளக்கு பூஜையில் முடி தீப்பிடித்தல் என்பது நல்லதல்ல.

🌟 குலதெய்வ வழிபாடு செய்வது சிறந்த பரிகாரம் ஆகும்.

3. சுவாமிக்கு வீட்டில் திருமணம் செய்யலாமா?

🌟 உரிய அந்தணர்களை கொண்டு பொது மக்கள் என அனைவரையும் அழைத்து சுவாமிக்கு வீட்டில் திருமணம் செய்யலாம்.

4. துலாம் லக்னக்காரர்கள் மரகதப் பச்சைக்கல் மோதிரம் அணியலாமா?

🌟 துலாம் லக்னக்காரர்கள் மரகதப் பச்சைக்கல் மோதிரம் அணியலாம்.

🌟 ராசிக்கற்களை அணியும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

5. ஆலயங்களுக்குச் செல்லும்போது நுழைவுவாயிலின் படிநிலையை மிதிக்காமல் செல்கிறோம். ஆனால், தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வரும் பொழுது அதே படிநிலையை மிதித்து வர வேண்டுமா? அல்லது தாண்டி தான் வர வேண்டுமா?

🌟 ஆலயங்களுக்குச் செல்லும்போதும், இறைவனை வழிபட்டு வெளியே வரும் போதும் நுழைவுவாயிலின் படிநிலையை மிதிக்காமல் வரவேண்டும்.

6. மூதாதையர் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

🌟 சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்வது சிவபூஜை ஆகும்.

🌟 ராமேஸ்வரம் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, சிவ வழிபாடு செய்து வருவது சகல சௌபாக்கியங்களையும் அருளும்.

7. நான் துலாம் ராசி, துலாம் லக்னம், சுவாதி நட்சத்திரம். எந்தக்கல் வைத்து வெள்ளி மோதிரம் அணிய வேண்டும்?

🌟 துலாம் லக்னக்காரர்கள் வைரக்கற்களை அணியலாம்.

🌟 ராசிக்கற்களை அணியும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.


Share this valuable content with your friends