No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனின் பிறவியில் மறைந்திருந்த பூர்வ ஜென்ம ரகசியம்..!!

Apr 20, 2023   Ramya   187    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனின் பிறவியில் மறைந்திருந்த பூர்வ ஜென்ம ரகசியம்..!!

ஒருநாள் நீங்களும், உங்களுடைய மனைவியும் மலர்கள் நிறைந்த நந்தவனத்திற்கு சென்றீர்கள். அப்பொழுது அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு குளத்தில் அன்னபட்சிகள் கூட்டமாகவும், அழகாகவும் நீந்தி கொண்டிருந்தன. அதை கண்ட உங்களுடைய மனைவி தனக்கு ஒரு அன்னபட்சி வேண்டும் என்று கேட்டார்.

🌟 உடனே நீங்கள் எந்தவித மறு வார்த்தையும் கூறாமல் குளத்தில் நீந்தி கொண்டிருந்த ஒரு அன்னபட்சியை மட்டும் எடுத்து, ஒரு கூண்டில் அடைத்து உங்களுடைய மனைவிக்கு அதை பரிசாக அளித்தீர்கள்.

🌟 உங்களுடைய மனைவியும் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு பெற்று கொண்டார். பின் இருவரும் அரண்மனைக்கு வந்தீர்கள். அங்கு இருந்த உங்களது தந்தை கூண்டில் அடைப்பட்டிருந்த அன்னபட்சியை கண்டு மிகுந்த கோபம் அடைந்தார்.


🌟 ஆனாலும் அவர் அவ்விடத்தில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தாமல் சிறிது நேரம் கழித்து உங்களை தனியே அழைத்து சென்று சில நல்ல உரைகளை எடுத்து கூறினார். அதாவது நமக்கு எந்தவிதத்திலும் தீங்கு விளைவிக்காத உயிரினத்தை வதைக்கவோ அல்லது அதை பிடித்து சிறையில் அடைத்து நாம் இன்பம் அடைவதோ கூடாது. அவை மிகவும் தவறு.

🌟 உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களிடத்திலும் எவனொருவன் அன்பு கொள்கின்றானோ, அவனே தெய்வத்தை அடைய முடியும் என்றும் கூறினார்.

🌟 அதை கேட்டதும் உங்களது மனதளவில் ஒரு தெளிவான சிந்தனை பிறந்தது. அதாவது இல்லற வாழ்க்கையில் இருந்தால் தானே மனைவியின் பேச்சுக்களுக்கு கட்டுப்பட்டு நாம் தவறுகளை செய்ய நேரிடும் என்பதை புரிந்து கொண்டீர்கள்.

🌟 பின் அரச வாழ்வில் இருந்து முழுவதுமாக விலகி, துறவு நிலையை அடைந்து, அனைத்து விதிமுறைகளையும் சரியாக பின்பற்றினீர்கள். ஆனாலும் உங்களால் பிறவாமை நிலையை அடைய முடியவில்லை.

🌟 அதற்கு காரணம் ஒரு கூட்டத்திலிருந்து ஒரு உயிரை மட்டும் தனியாக பிரித்ததினால் அந்த உயிரினம் அடைந்த வேதனையும், வலியும் தான். அதுவே நீங்கள் மற்றொரு பிறவி எடுப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது. அதனால் தான் இப்பிறவியில் நீங்கள் தாய், தந்தையர்களை பிரிந்து வேறொருவரிடம் வளர்ந்து வந்தீர்கள்.

🌟 அதுமட்டுமல்லாமல் எதுவும் அறியாத அந்த அன்னபட்சியை கூண்டில் அடைத்ததால் தான், நீங்களும் செய்யாத தவறுக்காக சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகியது.

🌟 இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா? உங்களது பிறவியில் மறைந்திருந்த பூர்வ ஜென்ம ரகசியங்களை என்று கேட்டார் அந்த துறவி.

🌟 உடனே சீவகன், இனி எனக்கு எந்த பிறப்பும் இருக்க போவதில்லையா? என்று கேட்டான்.

🌟 அதற்கு அந்த துறவி, இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் மறுபிறப்பு உள்ளதா? இல்லையா? என்பது அவரவர்கள் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமையும். இப்பிறவியில் நீங்கள் நல்வினைகளை சேர்த்து கொண்டால் இப்பிறவியிலேயே நீங்கள் பிறவாமை நிலையை அடையலாம் அல்லவா! என்றார்.

🌟 அப்பொழுது சீவகன், என் மனதில் இருந்த குழப்பங்களை புரிந்து கொண்டு, சரியான முடிவினை எடுப்பதற்காக வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கின்றீர்கள் என்றான்.


Share this valuable content with your friends