No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - அருகர் கோவிலுக்கு சென்ற சீவகனும் நந்தட்டனும்..!!

Apr 19, 2023   Ramya   117    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... அருகர் கோவிலுக்கு சென்ற சீவகனும் நந்தட்டனும்..!!

🌟 நந்தட்டன், என்னவாயிற்று அந்த குரங்குகளுக்கு? என்று கேட்க... ஒன்றும் நிகழவில்லை பொறுமையாக இரு என்று கூறிய சீவகன், மீண்டும் கூறுவதை தொடர்ந்தான். அதாவது வேடன் ஒரு அம்பை எடுத்து குரங்கை பார்த்து விடாமல் குரங்கிற்கு அருகில் இருக்கும் ஒரு மரத்தை பார்த்து எய்தான்.

🌟 அவன் எய்த அந்த அம்பினால் ஏற்பட்ட சத்தத்தினால் குரங்குகள் இரண்டும் உயிருக்கு பயந்து அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டன.

🌟 பின்பு வேடன் அவ்விடத்திற்கு சென்று, அந்த ஆண் குரங்கு எடுத்து வந்த அனைத்து சுளைகளையும் நிதானமாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

🌟 இவை அனைத்தும் உங்கள் கண்முன்னே நிகழ்ந்ததா? என்று கேட்டான் நந்தட்டன்.

🌟 அதற்கு சீவகன், ஆமாம்! எல்லாம் என் கண் முன்னே நிகழ்ந்தவை தான். ஆனால் நான் குரங்குகளை பார்த்து கொண்டிருந்தேனே தவிர, வேடன் வந்ததை கவனிக்க தவறி விட்டேன்.

🌟 ஒருவேளை நான் மட்டும் கவனித்திருந்தால் வேடனை தடுத்திருந்திருப்பேன். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒரு நாடகம் போல சில நொடிகளில் நடந்து முடிந்து விட்டது.

🌟 ஆனால் அதை பார்த்ததும் எனது மனம் மிகுந்த கனமாக மாறிவிட்டது. மேலும் இனம்புரியாத சோகமும், குழப்பமும் என் மனதில் அதிகமாக தோன்ற தொடங்கியது.

🌟 இதில் என்ன நிகழ்ந்தது? ஏன் உங்களது மனம் இந்த நிகழ்வினால் மிகுந்த குழப்பத்திற்கு சென்று இருக்கின்றது? என்றான் நந்தட்டன்.

🌟 நன்றாக சிந்தித்து பார் நந்தட்டா! எனக்கும், அந்த வேடனுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லையே.

🌟 கட்டியங்காரனை போல தான் அந்த குரங்குகளும், கட்டியங்காரன் சதி செய்து இந்த ஆட்சியை பிடித்திருந்தாலும், அவனை விரட்டி விட்டு அவன் கையில் இருந்த ஆட்சி என்ற பழத்தை இப்பொழுது நான் எடுத்து கொண்டு உண்டு கொண்டிருக்கின்றேன் அல்லவா!

🌟 சீவகனிடத்தில் என்ன சொல்வது? என்று தெரியாமல் நந்தட்டனும் அமைதியாக சிந்தித்து கொண்டே இருந்தான்.

🌟 என் முன் நடைபெற்ற இந்த நாடகம் சாதாரணமாக எனக்கு தோன்றவில்லை. பல நாட்களாகவே எனக்கு இந்த ஆட்சி, குடும்பம், மனைவி, மக்கள் என அனைவரும் பெரிதாக தோன்றவில்லை.

🌟 என் மனம் இனம்புரியாத பலவிதமான குழப்பங்களினால் அகப்பட்டு குழம்பி கொண்டே இருக்கின்றது. இதை நிவர்த்தி செய்வதற்காக தான் இந்த காட்சி எனக்கு வந்திருக்குமோ? என்று என் மனம் எண்ணுகிறது. இதை நிவர்த்தி செய்வதற்கு ஒரேயொரு வழி அருகர் மட்டுமே. வா நாம் இருவரும் அருகர் கோவிலுக்கு சென்று வரலாம் என்றான் சீவகன்.

🌟 பின்பு நந்தட்டனும், சீவகனும் அருகர் கோவிலுக்கு சென்று, மனம் உருகி வழிபட்ட பின்பு வெளியே வந்து ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.



Share this valuable content with your friends


Tags

வெள்ளை மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்? ஆண்களுக்கு கழுத்தின் வலது புறம் மச்சம் புரட்டாசி மாதம் சுப வேலைகளை செய்ய நல்ல நாட்கள் daily rasipalan 02.02.2020 in pdf format தைப்பூசம் ஜாதகத்தில் சனி கிரகம் லக்னத்தை பார்த்தால் என்ன பலன்? துளசி இலைகளால் அலங்காரம் இந்த கிரகங்களுடன்... சந்திரன் சேர்ந்தால்.. லாபம் அடைவார்கள்..! அன்னதானம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் ? naval tree today rasipalan 07.03.2020 08.04.2020 rasipalan in pdf format பிரெஞ்சு கணிதவியலாளர் same child தினசரி ராசிபலன்கள் (16.02.2020) ஐயப்பன் ஆபரணம் பூணுவது ஏன்? நாகதோஷம் உள்ள விதவை பெண்ணை மறுமணம் செய்யலாமா? உயர்ந்த ஞானம் கிடைக்கும் வரலட்சுமி விரதம் ஜுலை 24