No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மீண்டும் துறவறம் மேற்கொண்ட விசையை..!!

Apr 18, 2023   Ramya   122    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மீண்டும் துறவறம் மேற்கொண்ட விசையை..!!

🌟 எப்படி வாழ வேண்டும்? என்பதை நிர்ணயிக்க முடிந்த நம்மால், நமது இறப்பினை மட்டும் அறிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றோம். ஒருவேளை நற்பலன்களை சேர்ப்பதற்கான வாய்ப்பும், காலமும் கிடைத்தால், அந்த வாய்ப்பை தவறவிட்ட பிறகு அன்றே செய்திருக்கலாமே என்று மனம் வருந்துவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? என்று கேட்டார் விசையை.

🌟 உண்மையை சரியாக சொன்னீர்கள் அரசி! நானும் அந்த நற்பலன்களை சேர்த்து கொள்வதற்காக உங்களுடன் துறவறம் வருகின்றேன். என்னையும் அழைத்து செல்லுங்கள் என்றார் சுநந்தை.

🌟 சுநந்தை கூறியதை கேட்ட சீவகன், ஒரே நேரத்தில் என்னுடைய இரண்டு தாய்களையும் என்னால் இழக்க முடியாது. ஏன் உங்களிடத்தில் இவ்வளவு மாற்றம்? என்னை சிறு வயதில் இருந்து வளர்த்தது நீங்கள் தான். எனக்கு பசி வரும்பொழுது உணவளித்து என்னை ஆரோக்கியமாகவும், தேவைக்கேற்ப உணவு, உடை, இருப்பிடம் கொடுத்தும் பார்த்துக் கொண்டீர்கள்.

🌟 இப்பொழுது திடீரென்று என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு மனம் வந்து விட்டதா? நான் அப்படி என்ன தான் பாவம் செய்தேன்? நான் பிறந்தவுடன் எனது தாயை இழந்தேன். வளர்ந்த பின்பு என்னை வளர்த்த தாயையும் நான் இழக்க வேண்டுமா? ஏன் இரண்டு பேரும் ஒரே முடிவில் இருக்கின்றீர்கள்?.. இருவரும் என்னுடனே இருக்க வேண்டும் என்று தான் நான் எண்ணுகிறேன் என்றான் சீவகன்.


🌟 நீ ஒரு பாவமும் செய்யவில்லை மகனே! என்னுடைய மகன் என்று எண்ணியதால் மட்டுமே நான் உன்னை எந்த துன்பங்களும் நேரிடாமல் நன்றாக பார்த்துக் கொண்டேன். இப்பொழுது எனக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்தப் பெருந்தேவி பட்டத்திற்காகவும், அரச போக சுகத்திற்காகவும் அல்ல என்றாள் சுநந்தை.

🌟 நான் எந்தவாரு தவறும் இழைக்கவில்லை என்றால் ஏன்? இருவரும் என்னை விட்டு செல்ல வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். இரண்டு தாய்கள் இருந்தும் நான் இப்பொழுது ஆதரவற்றல்லவா இருக்கின்றேன். இருவருடைய மனமும் மாற வேண்டும். நீங்கள் எப்பொழுதும் என்னுடன் தான் இருக்க வேண்டும் என்றான் சீவகன்.

🌟 விசையை உடனே சுநந்தையை பார்த்து, சீவகன் கூறுவதும் உண்மை தானே! ஒரே நேரத்தில் இரண்டு தாய்களையும் இழந்து விட்டால் சீவகனும், நந்தட்டனும் எவ்வளவு துன்பங்களை அனுபவிப்பார்கள்.

🌟 நான் பாதியில் வந்தவள். ஆகையால் பாதியில் செல்லலாம். ஆனால் நீயோ அவர்கள் பிறப்பிலிருந்து இருக்கின்றாய். உன்னுடைய பிரிவு அவர்களிடத்தில் பெரும் மன வேதனையை உருவாக்கிவிடும். அதுமட்டுமல்லாமல் அரசருடைய நிலைமை என்னவாகும்? என்று சிந்தித்து பார்த்தாயா!

🌟 நான் துறவறம் மேற்கொள்கின்றேன் என்றால் எனது சூழ்நிலையும், எனது வாழ்க்கை நிலையும் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. ஆனால் உனக்கு அப்படி அல்ல. அதனால் நீ என்னுடன் துறவறம் வர வேண்டாம். எனது பொறுப்புகளையும் நீயே ஏற்று கொண்டு நம் குழந்தைகளை நல்முறையில் வளர்த்து சிறந்த தாயாக நீ இருந்து, உமது புண்ணியங்களை சேர்த்து கொள்வாயாக! என்று கூறினார்.

🌟 விசையையின் கூற்றில் இருந்த வலிகளையும், வேதனைகளையும் புரிந்து கொண்டு சுநந்தை, அவரை இறுக அணைத்து கொண்டு, என்னால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியவில்லை. இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு உங்களிடமே நான் கொடுக்கின்றேன். அதை மீறி நான் செயல்பட மாட்டேன் என்றார்.


🌟 விசையை, சுநந்தையை பார்த்து நீ நம் மகன்களுடன் இரு! நான் இக்கணமே துறவறம் மேற்கொள்கிறேன் என்று கூறி விட்டு சீவகனிடம் இருந்தும், சுநந்தையிடம் இருந்தும் விடைபெற்று அருகில் இருந்த அடர்ந்த வனத்தினை நோக்கி எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சென்று விட்டார்.

🌟 அப்பொழுது சீவகன் எவ்வளவு முயன்றும் விசையையின் முடிவை மாற்ற முடியவில்லை. மேற்கொண்டு அவரை கட்டாயப்படுத்த விருப்பமில்லாமல், தன் கண்களில் இருந்து மறையும் வரை விசையையே பார்த்து கொண்டிருந்தான்.


Share this valuable content with your friends


Tags

அந்தகாசூரன் பிரம்மதேவரை எண்ணி கடுந்தவம் செய்தல் வார ராசிபலன்கள் (11.11.2019 - 17.11.2019) PDF வடிவில் !! ஆரோக்கிய குறைபாடுகள் நீங்க shuban மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? மஹாசிவராத்திரி தினசரி ராசிபலன் (01.01.2022) சித்திரை மாதத்தில் சொந்த இடத்தை விட்டுவிட்டு மே 04 பூச நட்சத்திரம் இந்த மூன்று கிரகங்கள் ஒன்றாக இருந்தால்... அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்...!! கௌரி நல்ல நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு சீமந்தம் நடத்தலாமா? வீடு கட்டுவது manthi கிரகப் பெயர்ச்சி பலன்கள் Wednesday rasipalan in pdf format - 25.07.2018 cats பாலகுமாரன் பணப்பெட்டி கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வைகாசி மாதத்தில் காது குத்து வைக்கலாமா?