No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - புதியதாக கட்டப்பட்ட கோவில்..!!

Apr 18, 2023   Ramya   125    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... புதியதாக கட்டப்பட்ட கோவில்..!!

🌟 சில நாட்கள் கழித்து விசையையும், சுநந்தையும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பல்லாக்கில் அமர்ந்து கொண்டு, எங்கே செல்கின்றோம் என்று தெரியாமல் சென்று கொண்டிருந்தார்கள்.

🌟 அப்பொழுது அவர்கள் இருவரும் பல்லக்கு தூக்கி செல்பவர்களிடம், எங்களை எங்கே அழைத்து சென்று கொண்டிருக்கின்றீர்கள்? என்று வினவினார்கள்.

🌟 அதற்கு அவர்களோ, எங்களை மன்னிக்க வேண்டும் அரசிகளே! உங்களை எங்கே அழைத்து செல்கின்றோம் என்று கூறக்கூடாது என மன்னர் கட்டளையிட்டிருக்கின்றார். அதை மீறி எங்களால் செயல்பட முடியாது என்று கூறினார்கள்.

🌟 உடனே விசையை, சுநந்தையிடம் இப்பொழுது நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம் என உனக்கு தெரியுமா? என்று வினவினார்.

🌟 எனக்கு எதுவும் புலப்படவில்லையே அரசி! நாம் இப்பொழுது ராசமாபுரத்தில் தான் இருக்கின்றோமா? அல்லது வேறு எங்கேயாவது இருக்கின்றோமா? என்று கூட எனக்கு தெரியவில்லையே அரசி! என்றார் சுநந்தை.

🌟 உன்னிடத்தில் நான் எத்தனை முறை கூறியிருக்கின்றேன், என்னை அரசி என்று கூப்பிடாதே! என, எது நிகழ்ந்தாலும் நான் ஒரு துறவி தான். அதை எப்பொழுதும் நினைவில் வைத்து கொள் என்றார் விசையை.

🌟 இப்பொழுது நீங்கள் எங்களுடன் சாதாரண இல்லற வாழ்க்கையில் தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்படி இருக்கும் பொழுது, நீங்கள் எப்படி துறவி ஆவீர்கள்? என்று கேட்டார் சுநந்தை.

🌟 நீ கூறுவதும் சரி தான்! அதனால் தான் நான் மீண்டும் துறவறம் செல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன் என கூறி கொண்டே காற்றில் வந்த மணத்தினை முகர்ந்து பார்த்தவர், நாம் ஏதோ மலர் தோட்டத்திற்கு வந்திருக்கின்றோம் என்று எண்ணுகிறேன் என்றார் விசையை.


🌟 அதேசமயம் சீவகனின் ஆணைப்படி பல்லக்கு அவ்விடத்திலேயே நிறுத்தப்பட்டு, அவர்கள் கண்களில் கட்டப்பட்டிருந்த துணியானது அகற்றப்பட்டது.

🌟 கண்ணில் இருந்த துணிகள் அகற்றப்பட்டதும் சுற்றி பார்த்த விசையை, இந்த இடம் ஏதோ பழக்கப்பட்ட இடம் போல இருக்கின்றது. ஆனால் இது எந்த இடம் தான் என்று தெரியவில்லை? என்றார்.

🌟 அந்த இடத்தில் நறுமணங்கள் நிறைந்த பல மலர் செடிகள் வைக்கப்பட்டு, ஒரு நந்தவனமே உருவாக்கப்பட்டு இருந்தன. மேலும் அந்த நந்தவனத்தின் நடுவில் ஒரு அழகிய கோவில் புதியதாக கட்டப்பட்டு இருந்தது.

🌟 பின், சீவகா இது என்ன இடம்? அங்கே தெரிகிறதே அது கோவில் தானா? நாம் உள்ளே போய் பார்க்கலாமா? என்று வினவினார் விசையை.

🌟 பார்க்கலாம் தாயே! என்று இருவரையும் சீவகன் உள்ளே அழைத்து சென்றான். அப்பொழுது இரண்டு மூலஸ்தானங்கள் இருந்ததை பார்த்தார்கள். அதில் ஒரு மூலஸ்தானத்தில் ஒரு பெண் வடிவம் மூலவராக இருந்தது. இந்த தெய்வத்தின் பெயர் என்ன? இந்த தெய்வத்தின் முகத்தை பார்க்கும் பொழுது எனக்கு ஏற்கனவே பழகிய முகம் போல தெரிகிறதே என்று கூறினார் விசையை.

🌟 அதற்கு சீவகன் தனது தாயை பார்த்து கொண்டே, இவர் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் தான். இவரின் பெயர் செண்பக மாலை என்றான்.

🌟 சீவகன் செண்பக மாலை என்று கூறியதும், விசையையின் கண்களில் இருந்து நீர் வழிய துவங்கியது. (ஏனென்றால் கட்டியங்காரனின் படைகளிடம் இருந்து தன்னை காப்பாற்றி, தனக்கு பிரசவம் பார்த்த தெய்வம் அல்லவா!) பின் அந்த சிலையை பார்த்து தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தாள்.


Share this valuable content with your friends