No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனிக்கிழமை விரதம் இருப்பதால் இத்தனை பலன்கள் உண்டா?

Apr 17, 2023   Ramya   181    ஆன்மிகம் 


சனிக்கிழமை விரதம்...!!


🙏 நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே விரதங்கள் இருக்கின்றோம். அதிலும் பெரும்பாலும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் வேண்டுதலுக்கான முக்கிய காரணிகளாக இருக்கும். இவை மூன்றும் பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

🙏 நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானே ஆயுள்காரகன் ஆவார். ஆனால் சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்கு அதிபதியாவார்.

🙏 எனவே சனிக்கு அதிபதியான பெருமாளை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும். அதிலும் ஆயுள் பலம் அதிகரிக்க சனி விரதம் ஒன்றே மிகவும் உகந்ததாகும்.

🙏 இவ்வாறு தொடங்கும் சனிக்கிழமை விரதத்தினை 11 வாரங்கள் முதல் 51 வாரங்கள் வரை தொடர்ந்து கடைபிடித்தால், உங்களின் பாவ பலன்கள் நீங்கி நல்ல பலன்கள் உண்டாகும்.

சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கும் முறை :

🙏 சனிக்கிழமையன்று காலை குளித்துவிட்டு, பூஜை செய்து, காலை மற்றும் மதிய வேளைகளில் எந்த உணவு வகைகளும் உண்ணாமல் பால், பழம், தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.

🙏 மாலையில் சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு இரவு வேளை மட்டும் ஏதேனும் ஒரு எளிமையான உணவை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். அதேபோல் சனிக்கிழமையில் அசைவத்தை தவிர்த்து விடுதல் என்பது மிகவும் நல்லதாகும்.

🙏 அதுமட்டுமல்லாமல் சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று, சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி, கருப்பு எள் மற்றும் வேகவைத்த சாதம் இவற்றை படைத்து, தீபமேற்றி வழிபட்டு வந்தாலும் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.

சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள் :

🙏 கும்பம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு அதிபதியாக இருப்பவர் சனிபகவான். எனவே இவர்கள் நிச்சயமாக சனிக்கிழமை விரதத்தை கடைபிடித்தால் நல்ல பலன்கள் கிடைத்து, வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

🙏 ரிஷபம், கன்னி, துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் லக்னத்திற்கு யோகாதிபதியாக சனிபகவான் இருக்கிறார். எனவே இவர்களும் சனிக்கிழமை விரகத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நல்ல பலன்கள் அதிக அளவில் கிடைக்கப் பெறுவர்.

🙏 மற்ற ராசிக்காரர்களும் சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வர அவர்களிடமிருந்து துன்பம் தரக்கூடிய தீய பலன்கள் விலகி, நல்ல பலன்கள் கிடைக்க பெறுகின்றனர். இவ்வாறு சனிக்கிழமை விரதத்தை பின்பற்றுபவர்கள் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் ஆகிய முப்பலன்கள் நிச்சயம் கிடைக்கப் பெறுவர்.


Share this valuable content with your friends