No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சோபகிருது தமிழ் வருடம் எப்படி அமையப் போகிறது?

Apr 17, 2023   Ramya   121    ஆன்மிகம் 


தமிழ் புத்தாண்டு சோபகிருது வருடம்... எப்படி அமையப் போகிறது?

🎉 தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

🎉 ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் உள்ளன. அதே போன்று தமிழில் சித்திரை, வைகாசி என்ற 12 மாதங்கள் உள்ளன.

🎉 உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகில் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.

🎉 சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரை உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தின் பெயர்களானது, அம்மாதத்தில் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே கொண்டுள்ளது.

🎉 உதாரணமாக, சித்திரை மாத பௌர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயர் சித்திரை. இதே போன்று, வைகாசி மாத பௌர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையில் தான் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

புதுவருட துவக்கம் :

🎉 சோபகிருது தமிழ் புத்தாண்டு துவங்கியது.

🎉 இடைக்காடர் சித்தர் இயற்றிய தனது நூலான "அறுபது வருட வெண்பா" என்ற நூலில் சோபகிருது வருடம் பற்றி உள்ள பாடல் பின்வருமாறு

சோபகிருது வருட பலன்

சோபகிருதுதன்னிற் றெல்லுலகெல் லாஞ்செழிக்குங்

கோப மகன்று குணம்பெருகுஞ்- சோபனங்கள்

உண்டாகு மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்

உண்டாகு மென்றே யுரை.

🎉 சோபகிருது வருடத்தில் மனிதர்கள் வேண்டிய அனைத்து நலன்களையும் பெற்று மகிழ்வார்கள். மனதில் இருக்கக்கூடிய கோப உணர்வுகள் குறைந்து அவர்கள் இடத்தில் நல்ல குணம் அதிகரிக்கும். மங்கள நிகழ்வுகள் பல நடைபெறும். நன்மைகள் மென்மேலும் பெருகும். மழை பொழிவினால் உலகமெங்கும் செழிப்பு உண்டாகும்.

தமிழ் வருட தொடக்கத்தில் உள்ள கிரக நிலைகள் :


🎉 இந்தியாவில் இணையம் சார்ந்த துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும்.

🎉 புதிய கல்வி நிறுவனங்கள் தோன்றும்.

🎉 நூல் விலை அதிகரிக்கும்.

🎉 கனிகள் மற்றும் ஆபரணங்களின் விலை உயரும்.

🎉 கோழிகளின் விலை மற்றும் முட்டை விலை உச்சத்தை அடையும்.

🎉 பாரம்பரியமான வைத்திய முறைகள் மக்கள் இடத்தில் பிரபலம் அடையும்.

🎉 நெற்பயிர் உற்பத்தியில் சரிவு ஏற்படும்.

🎉 அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பல நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.

🎉 கனிம பொருள் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு நெருக்கடிகள் அதிகமாகும்.

🎉 மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

தந்தையை வணங்கும் முறை அஸ்வினி நட்சத்திரம் உடையவர்கள் என்ன ராசியாக இருப்பார்கள்? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி கோவிலுக்கு மணி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் ஆனி இந்த வருஷ விருச்சிக ராசிபலன்.! வீட்டின் முதல் ஆணும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை dream சனி திசையில் புதன் புத்தி நடந்தால் என்ன பலன்? நாய்கள் துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பத்து பொருத்தங்களில் ஐந்து பொருத்தங்கள் சாதகமாக இருந்தால் திருமணம் செய்யலாமா? . மல்லிகைப்பூவை கனவில் கண்டால் என்ன பலன்? அதே ராசியில் உள்ள பெண்ணை தான் பார்க்க வேண்டுமா? neem பூஜை அறையில் கடவுள் படத்தின் அருகில் இறந்தவர்களின் படத்தை வைக்கலாமா? sangadahara sathurthi bus பூர்வீகத்தில் வீடு கட்டுவது சரியா?