No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - படையுடன் போருக்குச் சென்ற சீவகன்..!!

Apr 11, 2023   Ramya   166    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... படையுடன் போருக்குச் சென்ற சீவகன்..!!

🌟 காம்பிலி நாட்டு மன்னன் வீசிய வேலானது உலோக பாலனின் கையை கிழிக்க, உதிரம் வெளியேறி போர்க்களத்திலேயே மயக்கம் அடைந்தான். விழுந்தவன் வீழ்ந்து விட்டான்! என்று வெற்றி கழிப்போடு கத்த தொடங்கினான் மன்னன். 🌟 அப்பொழுது அரை மயக்கத்தில் இருந்த உலோக பாலன் இதை கேட்டதும் எங்கிருந்து அவ்வளவு பலம் வந்ததோ தெரியவில்லை, உடனே எழுந்து வில்லையும், அம்புகளையும் எடுத்து காம்பிலி நாட்டு மன்னன் மீது அம்புகளை மழையாக பொழிந்தான்.

🌟 சற்றும் எதிர்பார்க்காத இந்த திடீர் தாக்குதலினால் நிலை குலைந்த மன்னன் உலோக பாலனின் அம்புகளினாலே போர்க்களத்தில் இறந்து போனான். பின் அவ்விடத்திலேயே உலோக பாலனும் மயங்கி விழுந்து விட்டான்.




🌟 காம்பிலி நாட்டு மன்னன் இறந்ததும், அவனுடைய படைகள் என்ன செய்வது? என்று தெரியாமல் நின்று கொண்டிருந்த தருணத்தில், எதிர்பாராத விதமாக அவ்விடத்திற்கு வந்த பல்லவ படைகள் ஆவேசத்துடன் போரிட்டு காம்பிலி நாட்டு படைகளை வெற்றி கொண்டனர்.

🌟 பின் அன்று சூரியன் அஸ்தமித்தபோது அன்றைய நாள் போர் முடிவுற்றதற்கான சங்கு ஊதப்பட்டது. சிறிது நேரம் கழித்து, படை வீட்டில் அடிபட்ட தன்னுடைய யானைக்கு மருந்து வைத்து கொண்டிருந்த பதுமுகனிடம், உனக்கு ஒரு முக்கியமான செய்தி தெரியுமா? பூரணசேனனை சிங்கநாதன் கொன்று விட்டாராம் என்று கூறினான் தேவதத்தன்.

🌟 என்னது பூரணசேனனை சிங்கநாதன் கொன்று விட்டாரா! என்று ஆச்சரியமாக கேட்டான் பதுமுகன்.

🌟 உடனே தேவதத்தன், பூரணசேனன் உயிரோடு இருந்திருந்தால் கட்டியங்காரனுக்கு போரில் வெற்றி அடைவதற்கு ஏதாவது வாய்ப்புகள் இருந்திருக்கும். இருந்த கொஞ்ச வாய்ப்புகளும் அவனை விட்டு சென்று விட்டது என்றான்.

🌟 அதற்கு பதுமுகன், எல்லாம் சரி தான்! ஏதோ அவனுக்கு இன்று நேரம் சரியில்லை போல, அதனால் தான் சிங்கநாதன் கையால் இறந்திருக்கின்றான் என்று கூறி புன்னகைத்தான்.

🌟 சிறிது நேரம் கழித்து படை வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தார்கள். அதாவது கட்டியங்காரனுக்கு உதவியாக இருந்த மன்னர்களில் பாதிப்பேர் இன்று நம் மண்ணிலே இல்லை. ஏறத்தாழ நாம் வெற்றி பெற்றது போல தான் தோன்றுகின்றது என்று பேசி கொண்டிருந்தார்கள்.

🌟 அங்கிருந்தவர்களின் பேச்சை கேட்ட சீவகன், இன்னும் போரானது முடிவு பெறவில்லை. கட்டியங்காரன் உயிரோடு இருக்கின்ற வரை போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றான்.


🌟 உடனே புத்திசேனன், போரின் முதல் நாளே அவனுக்கு உதவியாக இருந்த பாதி மன்னர்கள் இப்பொழுது இல்லை. மீதியிருந்த மன்னர்களோ உயிருக்கு பயந்து நம் நாட்டை விட்டு சென்றிருப்பார்கள். ஆகவே நாளைய போரில் அவன் பிழைப்பதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை. நாம் அனைவரும் சேர்ந்து அவனை எமலோகம் அனுப்பி வைப்போம் என்று கூறினான்.

🌟 இல்லையில்லை... அவன் எனக்கான இலக்காவான். அவனை நான் மட்டும் தான் தனியாக எதிர்கொள்ள வேண்டும். அவனை என் கைகளினாலேயே கொல்ல வேண்டும் என்று கூறினான் சீவகன்.

🌟 அவர்கள் பேசி கொண்டிருந்த பொழுது ஒற்றர்கள் அவ்விடத்திற்கு வந்தார்கள். அவர்களிடத்தில் இருந்து ஒரு முக்கிய செய்தியை அறிந்து கொண்டான் சீவகன். அதாவது, கட்டியங்காரனை பாதுகாப்பது அமைச்சர் அரிச்சந்திரன் மட்டும் தான்! அவன் ஒரு சிறந்த போராளியும் கூட. நாளைய போரில் அரிச்சந்திரன் பத்ம வியூகத்தை அமைத்திருக்கின்றான். அந்த வியூகத்தில் யானை படைகள் முதல் வட்டத்திலும், குதிரை படைகள் அடுத்த வட்டத்திலும் அமைத்திருக்கின்றான் என்றான் ஒற்றர்களில் ஒருவன்.

🌟 உடனே சீவகன், அடுத்தடுத்த வட்டங்களில் யார் இருக்கின்றார்கள்? என்று கேட்டான்.

🌟 எங்களால் இதுவரை மட்டுமே ஊடுருவ முடிந்தது. ஆகையால் அடுத்தடுத்து என்ன படைகளை வைத்திருக்கிறான்? என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் எங்களுடைய வியூகம் என்னவென்றால், மூன்றாவது வட்டத்தில் கட்டியங்காரனுடைய 100 மகன்களை தான் வைத்திருப்பான் என எண்ணுகிறோம் என்று ஒற்றர்கள் ஒரு சேர கூறினார்கள்.

🌟 உடனே சீவகன் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று சிந்தித்து ஒரு முடிவை எடுத்தான். அது என்னவென்றால், பத்ம வியூகத்தை முறியடிக்க பெரும் படைகள் தேவைப்படாது. எனவே இரவோடு இரவாக வில் விடுவதில் சிறந்தவர்களை மட்டும் தேர்வு செய்து தன்னுடைய படையில் இணைத்து கொள்ள முடிவு எடுத்தான்.

🌟 பின் கதிரவன் தோன்ற, பொழுதும் விடிய சீவகனோ போருக்கு உண்டான உடைகளை அணிந்து கொண்டு, மனதில் தன்னுடைய தந்தையை கொன்றவனுக்கு இன்று பதில் கொடுக்கும் நாளாக இருக்கும் என்று எண்ணியபடியே தன் சிறுபடையுடன் போருக்கு கிளம்பி சென்றான்.

🌟 போருக்கு உண்டான சங்கு ஊதவும் பத்ம வியூகத்தை அடைந்த சீவகனின் படைகள், முதலில் யானைகளின் கண்களுக்கு கீழே குறி வைத்து அம்புகளை எய்து யானை படைகளை முழுவதும் வெற்றி கொண்டனர்.


Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (12.05.2020) பெண்ணை கனவில் கண்டால் சர்வதேச மாணவர் தினம் ஒருவரின் வீட்டின் அமைப்பில் தென்கிழக்கு பகுதியில் தவறான அமைப்புகள் வருமானால் ஏற்படக்கூடிய செலவுகள் தினசரி ராசிபலன்கள் (05.05.2020) ராகு திசை நடக்கும்போது தொழில் தொடங்கி மேன்மை அடைய என்ன செய்ய வேண்டும்? நான் கன்னி லக்னம். 7ல் சனி இருந்தால் என்ன பலன்? ஏலக்காயை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிவன் கோவில் காசு கிடைப்பது போல் கனவு பூ கொடுப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்? ஆரோக்கிய குறைபாடுகள் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! gost dream PANRI 3ல் சூரியனும் மலைக்குன்றின் மீது ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? dhinasari rasipalan in dpf format சித்திரையில் வீடு குடிப்போகலாமா? புலி