No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்த மன்னர்கள்..!!

Apr 10, 2023   Ramya   119    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்த மன்னர்கள்..!!

🌟 ஆறு நாட்கள் கடந்த பின்பு கட்டியங்காரன் இந்த பன்றியை யாராலும் தோற்கடிக்க முடியாதா? என்ன தான் நடக்கிறது? என்று கோவிந்தனிடம் கேட்டான்.

🌟 அதற்கு கோவிந்தன் புன்னகையுடன் பன்றியை வீழ்த்துவதற்கான சகுனங்கள் இன்று சாதகமாக இருக்கின்றன. அதனால் இன்று நிச்சயமாக பன்றியை வீழ்த்த ஒரு வீரன் வருவான் என்று கூறினார்.

🌟 இன்னும் நீங்கள் சகுனங்களை நம்பி கொண்டிருக்கின்றீர்களா? எனக்கு அதில் எள்ளளவும் நம்பிக்கையில்லை. நீங்கள் எனது நாட்டிற்குள் வந்த பொழுது கூட பல கெட்ட சகுனங்கள் நடைபெற்றதாக என் மனைவிமார்கள் கூறினார்கள். ஆனால் நானோ அதை பற்றி எதுவும் கவலைப்படவில்லை! என்று அவன் கூறி முடிப்பதற்குள், போட்டி நிகழும் மைதானத்தில் நுழைந்த போட்டியாளனை பார்த்து திகைத்து நின்றான் கட்டியங்காரன்.

🌟 சரியாக அதே சமயம் கோவிந்தன், சகுனங்கள் என்பது எதிர்காலத்தை நமக்கு முன்கூட்டியே தெரிவிப்பதாகும். அதை நம்பாதவர்களுக்கு அது ஒரு நிகழ்வு மட்டுமே! கல்லை நம்பியவனுக்கு நாயகன் காட்சியளிக்கிறான். கல்லை நம்பாதவனுக்கு எதுவும் தெரிய போவதில்லை என்று கூறினார்.

🌟 பின் கட்டியங்காரன் மதனனை எரித்து விடுவது போல் பார்த்தான். மதனனோ, தன்னை மன்னர் பார்த்து கொண்டிருப்பதை அறிந்திருந்தும் பார்க்காதது போல் அவருடைய பார்வையை தவிர்த்தான். இன்னும் இங்கிருந்தால் விபரீதங்கள் ஏதேனும் நிகழ்ந்து விடுமோ என்று எண்ணி அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றான். அவனை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று பொறுமை காத்த கட்டியங்காரன், போட்டியாளனாக வந்திருக்கும் சீவகனை மனதில் நினைத்து கொண்டு, ஒரு வணிகனுடைய மகன் அரசருடைய மகளை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்று கோவிந்தனிடம் வினவினான்.

🌟 அதற்கு கோவிந்தன், குடி வேறுபாடுகள் என்னிடம் இல்லை. என் ஆட்சியில் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை என்று கூறினார்.


🌟 இங்கு சீவகனோ போட்டி நடைபெறும் மைதானத்தில் பன்றியை கொல்வதற்கான அம்பை தேர்ந்தெடுத்து, அதை வில்லின் மீது வைத்து கொண்டு சரியான சமயத்திற்காக காத்திருந்தான். மற்ற போட்டியாளர்களை போல் அல்லாமல், பன்றியின் ஓட்டத்தை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான். அதாவது பன்றி எப்பொழுது நிழலில் பதுங்குகின்றது என்றும், அதன் மீது சூரிய ஒளிபடாத பொழுது உடலின் எந்தெந்த பாகங்கள் வெளியில் தெரிகிறது? என்றும், எந்த பாகத்தில் அம்பினை எய்தால் அது உடனே இறக்கும் என்பதையும் அறிந்து அதை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான்.

🌟 அப்போட்டியில் தோற்ற மன்னர்கள் சிலர் சீவகனின் செயலை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்கள். இவன் எப்படியும் பன்றியை கொல்ல போவதில்லை. எதற்காக அந்த பன்றியை கொல்கிறேன் என்று இவ்வளவு காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றான்? என்று அவர்களுக்குள்ளே பேசி கொண்டு சிரித்து கொண்டிருந்தார்கள்.

🌟 பின் சில விநாடியிலேயே பன்றியின் வாய் இரண்டு துண்டுகளாக பிளக்கப்பட்டது. ஆனால் சீவகன் எப்பொழுது அம்பை நாணில் ஏற்றினான் என்றும், அது எப்பொழுது பன்றியின் வாய்க்குள் நுழைந்தது என்றும் யாராலும் கணிக்க முடியாமல் அனைவரும் சீவகனையே ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தனர்.

🌟 ஆறு நாட்களாக எப்பொழுது அந்த பன்றி வீழும் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நொடியில் போட்டி முடிவு பெற்றது எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. பின் அங்கிருந்த யாரோ ஒருவர், போட்டியில் வென்றது சீவகன் தான் என்பதை அறிந்து கொண்டு சீவகன் வாழ்க என்று கத்தினார்.

🌟 உடனே அந்த மைதானம் முழுவதும் எழுந்த மகிழ்ச்சி ஆரவாரமானது விண்ணை பிளந்து நின்றது. மைதானத்தின் நாயகனான சீவகனோ அங்கு கரத்தில் வில்லை ஏந்திய வண்ணமாக நின்று கொண்டிருந்தான்.


Share this valuable content with your friends


Tags

மீண்டும் கல்லூரி சென்று படிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாகதோஷம் உள்ள ஆணை திருமணம் செய்யலாமா? வான் டி கிராஃப் வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மச்சம் இருக்கிறது. இதற்கு என்ன பலன்? ஆண்டாள் விரதம்..! சார்க் அமைப்பு கோவில் வாசல் திறந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தீபம் காட்டி வழிபடலாமா? 6ல் சனி ஆட்சி பெற்றிருந்தால் என்ன பலன்? வருட ராசிபலன்கள் 2020 கிரகப்பிரவேசத்திற்கு பின் எந்த நாளில் புதிய வீட்டிற்கு குடிப்போக வேண்டும்? கர்ப்பிணி வால்டர் ருடால்ஃப் ஹெஸ் குலதெய்வ கோவிலில் திருமணம் வைக்கலாமா? அஷ்டமி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஒருவரை கொலை செய்து வீட்டில் மறைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothider pathiilgal ஏகாதசி விரதத்தின் மகிமை வளைகாப்பு செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?